நேற்று இதே நேரம் ஒரு நடிகையின் இறப்புச் செய்தியை இந்திய மீடியாக்கள் அனைத்தும் ஹாட் நியூஸ்-ஆக எடுத்துப் போட அந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது பாலிவுட் நடிகை பூனம்பாண்டே இறந்ததாகச் சொல்லப்பட்ட தகவல் உண்மையல்ல என்றும், தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்றும் அவர் போட்ட பதிவால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாடலிங் துறையில் மிகவும் பிரபலமாக விளங்கிய பூணம் பாண்டே நஷா திரைப்படம் மூலம் இந்தி சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்து வந்தார்.
மேலும் கடந்த 2011 வருடம் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என பரபரப்பைக் கிளப்பியதன் மூலம் இந்தியா முழுவதும் அவர் கவனம் பெற்றார். சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக இருந்தார்.
பாலிவுட் தவிர “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் பூனம் பாண்டே நடித்துள்ளார். மேலும் லாக் அப் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பூனம் பாண்டே நடித்துள்ளார்.
32 வயதான பூணம் பாண்டேவுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்ததாகச் செய்திகள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இவரின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் பூனம் பாண்டேவின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்தனர்.
முதல் படமே இப்படி ஒரு கேரக்டரா..!! திறமையால் திரையில் ஜொலிக்கும் நாசரின் சினிமா பயணம்
இந்நிலையில் இச்செய்தியானது தற்போது பொய்யான தகவல் என்று மீண்டும் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது தனக்கு ஏற்பட்டுள்ள கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவே நான் மரணமடைந்ததாக பதிவு செய்தேன். இதுபோன்றதொரு செய்தியை வெளியிட்டு ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தான் நலமுடனும், மகிழ்வுடனும் இருப்பதாக பூனம் பாண்டே அப்பதிவில் கூறியுள்ளார். இவரின் இந்தச் செயலைக் கண்டு இப்படியெல்லாமா போஸ்ட் போடுவது என நெட்டிசன்களும், ரசிகர்களும் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
