எதிலுமே ஸ்பீடாக இருக்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்க வேகமெடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளும் படு ஜோராக நடந்து வருகிறதாம். அண்மையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய விஜய் அதில் பல யோசனைகளைத் தெரிவித்திருக்கிறாராம்.
தி கோட் படம் ரிலீஸ்-க்குப் பின் அதிகாரப் பூர்வ அரசியல் அறிவிப்பு இருக்குமாம். ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்‘ என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் மூலமாகச் செய்த பணிகளை இனி அரசியல் கட்சியாகப் பதிவு செய்து உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் விஜய் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சியில் முழுக்க முழுக்க டெக்னாலஜி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“நடிகன்னா என்ன கடவுளா?“ நிருபரின் கேள்விக்கு நச் பதில் சொன்ன எம்.ஆர்.ராதா..
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயலி இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஆளூங்கட்சி, மாற்றுக்கட்சியினரின் ரியாக்ஷனையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப மூவ் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக மாற்றுக் கட்சியினரின் மைண்ட் வாய்ஸ் எப்படி உள்ளது என்று கண்காணிக்குமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக சர்கார் படத்தில் வருவது போல சமூகத்தில் நன்மதிப்பில் உள்ளவர்களைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் அரசியல் சார்பின்றி செயல்படும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுமட்டுமன்றி மகளிர் முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போன்றோருக்கும் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற மே மோதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் களத்தில் குதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.