தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள் குறித்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விரத முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இப்பகுதி மக்கள் முத்தாரம்மனை நினைத்து தங்கள் கோரிக்கை நிறைவேறவும் ஏற்கனவே நிறைவேறிய கோரிக்கைக்காகவும் பல மாறு வேடங்களை அணிந்து தசராவுக்கு 3 மாதம் முன்பே இப்பகுதிகளில் சென்று யாசகம் பெறுவர் அதை கோவிலில் செலுத்துவர். இக்கோவிலின் முக்கியமான நேர்த்திக்கடன் இது. அது போல மைசூருக்கு பின்பு தசரா விழா பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவது இங்குதான்.
விஜய தசமி அன்று முத்தாரம்மன் சூரனை வதம் செய்வாள். இதற்கு முன்பே விரத நிகழ்வு துவங்கி விடும். இந்த வருடம் முத்தாரம்மன் விரத நாட்கள் இவைதான்
6.07.2021ல் இருந்து 101 நாட்கள் விரதம்
15.08.2021ல் இருந்து 61 நாட்கள் விரதம்
4.09.2021ல் இருந்து 41 நாட்கள் விரதம்
14.9.2021ல் இருந்து 31 நாட்கள் விரதம்
24.09.2021ல் இருந்து 21 நாட்கள் விரதம்
05.10.2021ல் இருந்து 11 நாட்கள் விரதம்
இதில் உங்கள் சூழலுக்கு ஏற்றபடி எந்த முறை விரதத்தை வேண்டுமானாலும் கடைபிடித்து முத்தாரம்மனை வணங்கலாம்.