ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும்.
ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும்.
கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும்.
சிறிது சுத்தமான பசும் சாண விபூதியை நிரப்பவேண்டும்.
அதன் பிறகு அந்த சல்லடை சிவலிங்கத்தின் தலைப் பகுதிக்கு நேராக பிடித்துக் கொள்ள வேண்டும்.
சிவ மந்திரம் ஜெபித்துக் கொண்டு சல்லடையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அந்தத் தண்ணீர் சல்லடையில் இருக்கும் உருத்திராட்சங்கள் வில்வ இலை விபூதி இவற்றின் மீது பட்டு சிவலிங்கத்தின் மீது பாயும்.
(ஒரே இடத்தில் சிவலிங்கம், 108 ருத்ராட்சங்கள், வில்வ இலை, விபூதி, சிவனடியார் ,சிவ மந்திரம் இணையும்போது அங்கே சிவகடாட்சம் சிவலோகத்தில் இருந்து உருவாகிறது)
இப்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும்
ஒவ்வொரு அமாவாசையன்றும்
ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும்
ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும்
ருத்ராட்சம் அபிஷேகம் செய்யலாம்.
லிங்காயத்துகள் என்பவர்கள் கர்நாடக மாநிலத்தில் வாழும் சிவ பக்தர்கள் ஆவர்.
அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிவலிங்கம் இருக்கும்.
அங்கே இப்படி தினமும் உருத்திராட்ச அபிஷேகம் செய்து வருகிறார்கள்.
இதன் மூலமாக அவர்களுக்கு மனித உறவுகள் மீதான பந்தபாசம் படிப்படியாக குறைகிறது. சிவகடாட்சம் பெருகிக்கொண்டே செல்கிறது.
நாம் ஒவ்வொருவரும் சிறிய அளவிலான சிவலிங்கம் வீட்டில் வைத்து வழிபடலாம்.
பூமியில் சிவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய தண்ணீர் பஞ்சம் உண்டாகும்; மனிதநேயம் குறையும் ;நிம்மதியாக வாழ முடியாமல் குடும்பங்கள் தவிக்கும்;
இந்த நிலை மாற நாம் ஒவ்வொருவரும் வீட்டிலேயே சிவலிங்கத்திற்கு பூஜை செய்வோம் .