முன்னணி நடிகர்கள் இரண்டிற்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த திரைப்படங்கள் ஒரு பார்வை!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி எம்ஜிஆர் முதல் ரஜினி கமல் மற்றும் விஜய் அஜித் என பல நடிகர்களும் இரட்டை வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளனர். இருப்பினும் சில படங்களில் இரண்டிற்கு மேற்பட்ட வேடங்களில் நடித்து அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அப்படி இரண்டிற்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1962 ஆம் ஆண்டு பிஆர் பந்தலு இயக்கத்தில் பலே பாண்டியா திரைப்படத்திலும், 1969 ஆம் ஆண்டு ஏசி திருலோக சந்தர் இயக்கத்தில் தெய்வமகன் திரைப்படத்திலும், கே. விஜயன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரிசூலம் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடிகர் சிவாஜி நடித்திருப்பார்.

அடுத்து கமலஹாசன் மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த படம் மூன்று முகம். 1982 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 250 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதே ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கு கிடைத்தது. அடுத்து விஜய் 3 வேடங்களில் நடித்த படம் மெர்சல். 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அஜித் மூன்று வேடங்களில் நடித்த படம் வரலாறு. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அடுத்து சூர்யா மூன்று வேடங்களில் நடித்த படம் 24. 2016ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்து சரத்குமார் மூன்று வருடங்களில் நடித்த படம் நம்ம அண்ணாச்சி. 1994 ஆம் ஆண்டு தளபதி இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியானது. கேப்டன் விஜயகாந்த் மூன்று வருடங்களில் நடித்த படம் சிம்மாசனம். ஈஸ்வரன் இயக்கத்தில் 2000 ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. சத்யராஜ் மூன்று வேடங்களில் நடித்த படம் வில்லாதி வில்லன்.

எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!

1995ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சத்யராஜின் 125 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் தெய்வமகன், சூலம், அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம், மெர்சல், வரலாறு ஆகிய படங்கள் நூறு நாட்களுக்கு மேலே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்திருந்தது.

அடுத்து கமல் நான்கு வருடங்களில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்துள்ளார். சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த திரைப்படம் முழு நீள காமெடி கதை கலந்த திரைப்படமாக அமைந்திருந்தது. அடுத்து பழைய நகைச்சுவை நடிகர் எம் ஆர் ஆர் வாசு சொர்க்கம் படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ளார். அடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார். அடுத்து பத்து வேடங்களில் எம் என் நம்பியார் திகம்பர சாமியார் திரைப்படத்திலும் நடிகர் கமலஹாசன் தசாவதாரம் திரைப்படத்திலும் 10 வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.