முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!

By Staff

Published:

77999038fbd0e773cc9fa7d30c9bcd37

முருகனை கும்பிடும்போதெல்ல்லாம் முருகனுக்கு இட, வலது பக்கம் இருப்பது யாரென்ற பலருக்கு குழப்பம் வரும் அந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த பதிவு.

வள்ளி முருகனுக்கு வலது பக்கமும், தெய்வானை முருகனுக்கு இடது பக்கமும் இருப்பாங்க. முருகனுக்கு. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்கள்.

வள்ளி வேடுவன் மகள், அதனால் வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கும். தெய்வானை தேவலோகத்து பெண். அதனால் தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலர் இருக்கும். முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்னிக் நேத்ரம் உண்டு.

வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்கும். அதேப்போல, இடதுபுறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக்கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்கும். அதனால், முருகப்பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்தி நான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான். வள்ளி போகத்தையும். தெய்வானை மோக்ஷத்தையும் அருளக் கூடியவர்கள்…! இதை நினைவில் கொண்டால் வள்ளி எந்த பக்கம்?! தெய்வானை எந்த பக்கமென்ற குழப்பம் வராது.

Leave a Comment