தனுஷ் போராளியாக நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ஐமேக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. ராக்கி, சாணிக் காயிதம் படங்களில் தெறித்த அளவுக்கு ரத்தம் இந்த படத்தில் தெறிக்கவில்லை. ஆனால், ஒரு ரெண்டு லாரி புல்லட்டுகள் தீர்ந்து இருக்கும்.
கேப்டன் மில்லர் விமர்சனம்:
அந்த அளவுக்கு படத்தின் முதல் காட்சியில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு பிரிட்டிஷ்காரர்களை சுடத் தொடங்கும் தனுஷ் கடைசி கிளைமேக்ஸ் வரை சுட்டுக் கொண்டே இருக்கிறார். பிரேக் விட்டதும் ரசிகர்கள் அவசர அவசரமாக எழுந்து ஓடினார்கள். அதே போல எண்ட் கார்டு போடுவதற்கு முன்பாகவே தியேட்டரை பாதி பேர் காலி செய்து விட்டனர்.
தனுஷின் அம்மா கோரனார் சிவன் கதை சொல்லும் விதமாக படம் ஆரம்பிக்கிறது. மாணிக்க கல்லில் உருவாக்கப்பட்ட சிவன் சிலை கோயிலில் ரகசிய அறையில் இருப்பதாக கூறுகின்றனர்.
அதை பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிந்துக் கொண்டு எடுத்துக் கொள்ள அந்த ஊர் ராஜா கொள்ளைக்காரனாக மாறி நிற்கும் தனுஷின் உதவியுடன் அந்த சிலையை மீட்க முயற்சிக்கிறார்.
கோரனார் சிலை கதை:
சிலையை திருட தனது கூட்டத்துடன் தனுஷ் பிளான் போட்டு ஜெயிலர் படத்தின் ப்ரீ கிளைமேக்ஸில் வருவது போல மிலிட்ரி வாகனத்தை எல்லாம் வெடித்துச் சிதற வைத்து அந்த மரகத சிலையை எடுத்துக் கொண்டு அந்த ராஜாவுக்கும் தனது திருட்டுக் கும்பலுக்கும் டாட்டா காட்டி விட்டு செல்கிறார்.
அதனால் ஊர் மக்களை கொன்று குவிக்க பிரிட்டிஷ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களை கொன்று மீண்டும் ஊர் மக்களை காப்பாற்றி கோரனார் சாமியை கோயிலுக்குள் வைக்க தனுஷ் என்ன என்ன முயற்சிகள் செய்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
ஜெயிலர் படத்தை போல இந்த படத்திலும் சிவராஜ்குமார் கேமியோ ரோல் தான். சந்தீப் கிஷனும் கேமியோ தான். ஒரு சில காட்சிகளே வந்தாலும் இருவரும் ஸ்க்ரீனை தெறிக்க விடுகின்றனர்.
தனுஷ், பிரியங்கா மோகன் மிரட்டல்:
பிரியங்கா மோகனுக்கும் படத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும் ஆரம்பம் மற்றும் கிளைமேக்ஸில் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். கொள்ளை கும்பலின் தலைவனாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல் நடிப்பு மிரட்டல். நிவேதா சதீஷ் புடவையை சுருட்டிக் கட்டிக் கொண்டு கடைசி வரை துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சுடும் போராளியாகவே வாழ்ந்து இருக்கிறார்.
ஹீரோ சைடு எந்தவொரு பெரிய இழப்பும் இல்லாதது. தனுஷ் அம்மா இறக்கும் காட்சியில் எமோஷனல் கனெக்ட் இல்லாதது. இதெல்லாம் எங்கே நடக்கிறது. அடுத்து என்ன ஆனது? என்றும் தெரியாமல் இந்த படத்தை முடித்து விட்டனர்.
கேப்டன் மில்லர்: ஏதோ மிஸ்ஸிங்!
ரேட்டிங்: 3/5.