தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என ரசிகர்களால் போற்றப்படும் ஒரே கலைஞர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமே. கதைக்கேற்ற கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் மிகச் சிறப்பான நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருப்பார். படங்களில் நடிக்கும் பொழுது எந்த குறைவும் இல்லாமல் திருப்தியாக நடிக்க வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. இப்படி இருக்க எம் எஸ் வி இசையில், டிஎம்எஸ் குரலில், கண்ணதாசன் அவர்களுடைய ஆழமான வரிகளில் சிவாஜியின் படத்திற்கு ஒரு பாடல் தயாராக இருந்தது. ஆனால் அந்த பாடல் படப்பிடிப்பின் பொழுது நடிகர் திலகம் சிவாஜி மிகவும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கான முழு காரணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1977 ஆம் ஆண்டு பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அவன் ஒரு சரித்திரம். இந்தப் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் உடன் இணைந்து மஞ்சுளா, காஞ்சனா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கும், இந்த ஐந்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியிருப்பார். இந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிவாஜி மற்றும் மஞ்சுளா இணைந்து நடனமாடி இருக்கும் அம்மானை அழகு மிகு கண்மானை எனும் பாடல் இலக்கிய நயத்துடன் அமைந்திருக்கும். இதனால் மக்கள் மத்தியில் இந்த பாடல் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் மையக்கதை படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவாஜி நடித்திருப்பார். அவரை ஒழுங்கான முறையில் பணி செய்ய விடாமல் உள்ளூர் பணக்காரர்கள் தொந்தரவு செய்து வருவார்கள் இதனால் ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு பத்திரிக்கை ஒன்றை தொடங்குவார் சிவாஜி. அதன்மூலம் ஊழல்களில் ஈடுபட்ட பணக்காரர்களின் குற்றங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே படத்தின் கதையாக அமைந்திருக்கும். இந்த இடத்தில் நடிகர் சிவாஜி மற்றும் மஞ்சுளாவிற்கு இடையே ஒரு ரொமான்டிக் பாடல் இடம்பெற வேண்டும் என்பது படத்தின் ஒரு பகுதியாகும். அப்படி உருவான பாடல் தான் அம்மானை அழகு மிகு கண்மானை பாடல். இந்த பாடலை டி.எம். சௌந்தரராஜன் அவர்களும் வாணி ஜெயராம் அவர்களும் இணைந்து பாடி இருப்பார். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த பாடல் படக்குழுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
நடிகர் அஜித்தின் செயல் நியாயமா? சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்!
ஆனால் இந்த பாடல் காட்சியை எப்படி படமாக்குவது என்பது என தெரியாமல் மூன்று நாட்களாக இயக்குனர் பிரகாஷ் ராவ் தன் உதவி இயக்குனர்களுடன் கலந்த ஆலோசனையில் இருந்து வந்துள்ளார். அதன் பின் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு தயாராகி உள்ளார். படப்பிடிப்பு இடத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி வந்த உடன் எல்லாம் ஓகே தானே என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனரும் எடுத்துவிடலாம் என அரைகுறை மனதுடன் பதில் கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜிக்கு மிகுந்த கோபம் வந்துள்ளது.
இலக்கிய நயத்துடன் சிறப்பான வார்த்தைகளுடன் உருவாகி உள்ள இந்த பாடல் காட்சிகளை மிகப் சிறப்பாக படம் எடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் எடுத்துவிடலாம் என அரைகுறை மனதுடன் கூறுவது சரியாக இல்லை என கோபமடைந்துள்ளார். அதன் பின் படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை எடுத்துக் கூறிய இயக்குனர் இந்த பாடல் காட்சிகளை பூங்காவில் வைத்தும், டேம் ஓரங்களில் வைத்தும் எடுத்து முடித்துள்ளனர்.
இலக்கிய நயத்துடன் உருவான சிறப்பு மிகுந்த பாடலை படமாக்கப்பட்ட விதம் நடிகர் சிவாஜிக்கு பிடிக்கவில்லை. பாடல்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் எளிமையான காட்சிகளைக் கொண்டு அந்தப் பாடலை முடித்து படமாக்கி இருப்பது நடிகர் திலகம் சிவாஜிக்கு முழு மனதுடன் திருப்தியை கொடுக்கவில்லை, இந்த காரணத்தினாலேயே சிவாஜி படப்பிடிப்பின் பொழுது கோபப்பட்டதாகவும் சில தகவல்கள் உள்ளது.