பாலரிஷ்ட தோஷம் என்றால் என்ன

By Staff

Published:

09f219afa78a9c0debd48c30884e1f35

பாலாரிஷ்ட தோஷம் என்று ஒரு தோஷம் உள்ளது. சில குழந்தைகளுக்கு பிறந்ததில் இருந்தே கர்மா ரீதியான பிரச்சினைகளால் கடுமையான நோயுடன் பிறக்கும். சில நாட்களில் இறந்து விடும் அளவுக்கு கூட அதன் ஜாதகம் இருக்கும். இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலே கிடப்பது போன்று எல்லாம் அந்த குழந்தைக்கு பிரச்சினை இருக்கும்.

உடல் ரீதியாக கெடுவது அல்லது உயிருக்கு ஆபத்து போன்றவைதான் பாலாரிஷ்ட தோஷம் ஆகும் பிறந்த குழந்தைக்கு வருவது மட்டும்தான் இந்த பாலாரிஷ்ட தோஷம். அந்த குழந்தையை குறிப்பிட்ட வயது வரை பாதுகாப்பது கஷ்டமான ஒரு விசயம்.

பாலாரிஷ்ட தோஷம் போக்க குழந்தையை கோவிலில் நேர்ந்து விடுவது , சில கோவில்களில் குழந்தையை கோவிலில் ஒப்படைத்து விட்டு தவிடு கொடுத்து குழந்தையை ஸ்வாமி சன்னதிக்கு முன் நின்று கோவில் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பரிகாரங்கள் இதற்கு செய்யப்படுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் எல்லாம் இந்த பரிகாரங்கள் இன்றும் செய்யப்படுகின்றன. கோவிலுக்கு குழந்தையை முறைப்படி கொடுத்து விட்டு பின்பு அவர்களிடமே தவிடு போன்ற பொருட்களை கொடுத்து மீண்டும் குழந்தையை பெற்றுக்கொண்டால் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட குழந்தை இறைவன் குழந்தை எந்த ஆபத்தும் நேராமல் இறைவன் பார்த்துக்கொள்வார் என்பது ஐதீகம்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு என்பதால் பாலாரிஷ்டதோஷமே தற்போது கிடையாது என சில ஜோதிடர்கள் சொல்லி வருகின்றனர்.

Leave a Comment