லேடி சூப்பர் ஸ்டார் ஒதுக்கிய படத்தில் நாயகியாக நடித்து ஓஹோவென புகழ் பெற்ற அனுஷ்கா.. இந்தப் படம்தானா அது..!

By John A

Published:

சினிமாவில் சில முடிவுகள் தவறாக எடுக்கப்படும் போது அது அவர்களுடைய சினிமா வாழ்க்கைக்கே முழுக்குப் போட்டு விடும். அல்லது நழுவிய அந்த சந்தர்ப்பத்தால் வேறொரு நடிகருக்கு அந்தப்புகழ் சேர்ந்து விடும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில தவறான முடிவுகளை எடுத்து கோட்டை விட்டதில் அஜீத்தை சொல்லலாம். நான் கடவுள், கஜினி போன்ற படங்களை தவற விட்டதால் வளர்ந்து வந்த நடிகர்களுக்கு அந்தப் படங்கள் திருப்புமுனையாக இருந்தது.

ஆனால் ஷங்கருக்கு அடுத்த படியாக மிகப் பிரம்மாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்திலும் அப்படி ஒரு சம்பம் நடைபெற்றுள்ளது. அப்போது நயன்தாரா தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து லேடி சூப்பர் ஸ்டாராக உருவான தருணம். பாகுபலி படத்தின் தேவசேனோ கதாபாத்திரத்திற்கு ராஜமௌலி முதன் முதலில் அணுகியது நயன்தாராவைத் தானாம். ஆனால் அந்த நேரத்தில் அவரால் கால்ஷீட் பிரச்சினையால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதையடுத்து நடிகை அனுஷ்கா அந்த வாய்ப்பைப் பெற்றார். அனுஷ்கா முதன் முதலில் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். 2005-இல் வெளியான இப்படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே நாகர்ஜுனாவுடன் டூயட் பாடும் வாய்ப்பைப் பெற்றார் அனுஷ்கா. பின்னர் சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து தமிழில் அறிமுகமானார்.

ஜெயிலர், லியோ வசூலை ஓரங்கட்டிய பிரபாஸின் சலார்!.. இத்தனை கோடி வசூலா?

அதன்பின் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்தார். மேலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள அருந்ததி,பஞ்சமுகி, ராணி ருத்ரம்மா தேவி, இஞ்சி இடுப்பழகி மற்றும் பாகமதி ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.

இருப்பினும் இவர் பாகுபலி படத்தில் நயன்தாரா ஒதுக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தேவசேனாவாக பெரும்புகழ் பெற்றார். தனக்குக் கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா.

தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, ஆகியோருடன் நடித்தாலும் இன்னும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை.