கொஞ்சும் குமரி படத்தில் கதாநாயகியாக நடித்த மனோரமாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இந்தப் படம் 1963ல் வெளியானது. படம் முழுவதும் காமெடி பட்டையைக் கிளப்பியது. ஆர்.எஸ்.மனோகரின் ராஜாங்கத்தைக் காப்பாற்றும் அல்லி ராணியாகவே மாறிப்போனார் மனோரமா.
காட்டில் ஒரு கொள்ளை கும்பல் அவரைத் தாக்குகிறது. அந்தக் கும்பலின் தலைவனை காதலிக்கிறார் மனோரமா. ஜி.விஸ்வநாதன் இயக்கியுள்ளார். டி.ஆர்.சுந்தரம், கே.ஆர்.இந்திராதேவி, எஸ்.வி.ராமதாஸ், ஏ.கருணாநிதி, கே.கே.சௌந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் கதாநாயகியாக மனோரமா நடித்ததால் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு வரை மனோரமா நாடகக் கலைஞராகவே இருந்தார்.
1958ல் கவியரசர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான மாலையிட்ட மங்கை படத்தில் நடித்தார். நகைச்சுவை வேடத்தில் நடித்த மனோரமாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. இந்தப்படத்தின் மூலம் கண்ணதாசன் எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டார் என பெருமையாகக் கூறினார்.
ஆரம்ப காலகட்டத்தில் மனோரமா பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே நடித்து அசத்தினார் மனோரமா. தொடர்ந்து அவருக்கு முக்கியமான மற்றும் சவாலான வேடங்கள் கிடைத்தன. அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு துணை நடிகையான வேடங்கள் கிடைத்தன.
பல படங்களில் கிடைத்த வேடத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். யதார்த்தமான அவரது நடிப்பை யாராலும் மறக்க முடியாது. ஆயிரம் திரை கண்ட ஆச்சி என்று எல்லோராலும் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார். 250க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
2015ல் பிபிசியில் பேட்டி கொடுத்தார். அப்போது நான் கதாநாயகியாக மட்டுமே நடிக்கத் தேர்வு செய்து இருந்தால், வெகு காலத்திற்கு முன்பே திரையுலகை விட்டு காணாமல் போயிருப்பேன். நகைச்சுவை வேடங்களில் நடித்ததால்தான் என்னால் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்க முடிந்தது.
கடவுளின் விருப்பம் இருந்ததால் தான் 1000 படங்களுக்கு மேல் என்னால் நடிக்க முடிந்தது. 2015ம் ஆண்டு கடைசியாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில், இந்த ஜென்மத்தில் தான் பாக்கியசாலி என்றும், அடுத்த பிறவியில் மீண்டும் மனோரமாவாகவே பிறக்க விரும்புவதாகவும் கூறினார்.
அதே வாழ்க்கையையும், தன்னைச் சுற்றியுள்ள அதே மனிதர்களையும் அவள் விரும்புகிறாள். அவள் வாழ்க்கையில் எந்த வருத்தமும் இல்லை. அவள் தன் சொந்த வாழ்க்கையிலும் தன் திரைப்பட வாழ்க்கையிலும் மிகவும் திருப்தியாக இருந்தாள்.
நடிப்பு தான் எனக்கு வாழ்க்கை என்றார். பத்மஸ்ரீ விருது பெற்றார். 1989ல் புதிய படை என்ற தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
2015ல் தனது 78வது வயதில் மனோரமா காலமானார்.