என்னதான் சினிமாவில் நடித்து நிறைய பணம், புகழ், பெயரை ஈட்டினாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் ஓராயிரம் சோகங்கள் உண்டு. வறுமைக்காக சினிமாவில் நடித்தவர்களும் உண்டு. லட்சியத்திற்காக நடித்தவர்களும் உண்டு. ஆனால் சினிமா அனைவரையும் ஒரே மாதிரித்தான் பார்த்தது. ஆனால் சில நடிகைகள் சினிமாவில் ஜெயித்தாலும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் தங்கள் முடிவை தாங்களே தேடிக் கொண்டனர். தமிழ் சினிமாவில் அந்த லிஸ்ட் நீண்டது. அதில் சில குறிப்பிட்ட நடிகைகளைப் பார்க்கலாம்.
நடிகை விஜி
“கோழிகூவுது” படத்தில் அறிமுகமான நடிகை விஜி, இடுப்பு, முதுகுவலியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு, முள்ளந்தண்டுவட சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைசிகிச்சை தோல்வியடைந்ததுடன், அறுவைசிகிச்சை காயத்தில் நோய்த்தொற்றும் ஏற்பட்டது. தவிர, தற்காலிக பக்கவாதமும் ஏற்பட்டது. எனவே விஜி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை அறுவை சிகிச்சை கட்டணத்தை, விஜிக்கு வழங்கி, வழக்கை முடித்துக்கொண்டது. மீண்டும் விஜிக்கு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குணமானார்.
இறுதியாக “சிம்மாசனம்” என்ற படத்தில் நடித்தார். எனினும், அவரால், முன்புபோல இயல்பான, இனிமையான வாழ்க்கை வாழ இயலவில்லை. தவிர, இயக்குநர் எம்.ஆர் ரமேஷ் உடனான காதல் தோல்வியும், விஜி மனதை வாட்டவே, விஜி தற்கொலை செய்துகொண்டார். இறந்தபோது அவர் வயது 34 மட்டுமே.
சில்க்சுமிதா
கடன்தொல்லை, காதல்தோல்வி, நம்பிக்கைத் துரோகங்கள், உடல் உபாதைகள் உள்ளிட்ட பலவிதமான உடல், மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு, நடிகை சில்க்சுமிதா, தன் 36ஆம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
படாபட் ஜெயலட்சுமி
தன்காதல் கணவர் சுகுமார், அவருடைய முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, தன்னை இரண்டாந்தாரமாக திருமணம் செய்துகொண்டதை ஏற்கமுடியாமல், மனஉளைச்சலுக்கு ஆளாகி, நடிகை படாபட் ஜெயலட்சுமி, தன் 22 வயதிலேயே, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீ வித்யா
நடிகை ஶ்ரீவித்யா, காதல் தோல்வி, திருமண தோல்வி, நம்பிக்கை துரோகம், சொத்து இழப்பு, உள்பட வாழ்வில் அடுத்தடுத்து அவலமான சோகங்களை எதிர்கொண்டு, இறுதியில் புற்றுநோய்க்கு ஆளாகி, 53 வயதிலேயே மரணமடைந்தார்.
மோனல்
சிம்ரனின் தங்கையாக ஓரளவு பிரபலமான நடிகையாக திரையுலகில், வளர்ந்து வரும்போதே, பிரசன்னா என்ற நடனக் கலைஞரைக் காதலித்து, அக்காதலில் தோல்வியடைந்து, வேதனை தாளாமல், தனது 21 வயதிலேயே, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் மோனல்.
இதே போன்று ஷோபா, விஜே சித்ரா, பிரதியுக்ஷா என பல நடிகைகள் இந்த வரிசையில் இருக்கின்றனர்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
