வாழை மரம் வெட்டி தோஷம் கழிப்பது எதற்காக

By Staff

Published:

a1b29cfc31a19796c21d8cda89a63d2e

புதிதாக திருமணம் ஆகாதவர்களுக்கு களத்திர தோஷம், நாகதோஷம் போன்ற தீயதோசங்கள் இருந்தால் வாழை மரம் வெட்டி தோஷம் கழிப்பார்கள். இன்றும் ராமேஸ்வரம் , தேவிபட்டினம் என பல பரிகாரத்தலங்களில் இம்முறையை காணலாம்.ஒரு பிள்ளை பெற்றால் உடனே செத்தாள் அந்த உத்தமி யார்’ என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது.

அதனால்தான் வாழைக்கு தாலி கட்டினால் களத்திர தோஷம் மற்றும் தார தோஷம் ஆகியவை நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

வாழையை பெண்ணாக எண்ணி, வாழைக்கு தாலி கட்டினால் ஒரு மனித பெண்ணைத் திருமணம் செய்யும்போது அதில் மண முறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

ராகு கேதுக்களாலும், சுக்கிரனாலும் இது போல தோஷங்கள் ஏற்படுகின்றன. இது போல தோஷங்கள் ஜாதக ரீதியாக இருந்தால் தகுந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி வாழை மரம் வெட்டி பரிகாரம் செய்தால் திருமணம் கை கூடி வரும் என்பது நம்பிக்கை.

அதன்படி சிறிய வாழைக்கன்றுக்கு தாலி கட்டி அது வெட்டி விடப்படுகிறது. இப்படி செய்தால் முதல் திருமணம் முடிந்தது போல் ஆகும். முதல் மனைவியால் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து இரண்டாவது மனைவி தான் சேர்ந்து வாழ வேண்டும் என்ற விதி இருந்தால் முதல் மனைவியை பிரித்து விட்டது போல் செய்வதுதான் வாழைகன்றுக்கு தாலி கட்டி வெட்டி விடுவது ஆகும்.

Leave a Comment