ஹிந்து மத ரீதியாக வரும் புராணங்களில் தன்வந்திரி மருந்து கடவுளாக கூறப்படுகிறார்.இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது. இவர் விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறார். ஸ்ரீரங்கம் போன்ற மிகப்பெரும் விஷ்ணு ஆலயங்களில் தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது. ஜாதக ரீதியாக, கிரக ரீதியாக பாதிக்கப்பட்டு உடல் நலம் நலிவுற்றால் தன்வந்திரியை வணங்குவது சிறப்பை தரும். ஸ்ரீரங்கம் ஆலயத்தினுள் இருக்கும் தன்வந்திரிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
இதில் வாய்ப்பு இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். உடல்நலம், மனநலம் சரியில்லாதோர் தன்வந்திரிக்கு அபிசேகத்துக்குரிய செலவை ஏற்றுக்கொண்டு அனைத்துவிதமான அபிஷேகங்களும் செய்து இங்கு வழிபடலாம்.
செவ்வாய்ஸ்தலம் என அழைக்கப்படக்கூடிய வைத்தீஸ்வரன் கோவிலிலும் தனி சன்னதியில் தன்வந்திரி இருக்கிறார். இங்கும் தன்வந்திரியை வழிபடலாம்.