இப்படியெல்லாமா கூட யோசிப்பாங்க… பட டைட்டிலில் உலக நாயகன் செஞ்ச தரமான சம்பவம்

By John A

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் காட்பாதர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 70 வயது ஆனாலும் இன்னமும் 25 வயது இளைஞனைப் போல ஓடிக் கொண்டிருக்கிறார். இன்னமும் புதிது புதிதாக யோசித்து திரையுலகில் பல மாயாஜால வித்தைகளைக் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கிறார். என்ன புதிய தொழில்நுட்பம் என்றாலும் கமல்ஹாசனின் பார்வைக்கு வந்தே அடுத்த கணமே திரைப்படமாக உருவெடுத்து விடும்.

அந்த அளவிற்கு சினிமா காதலராக விளங்கும் உலக நாயகன் தனது பட டைட்டிலில் கூட வித்தியாசம் காட்ட விரும்புபவர். அவ்வாறு வித்தியாசமான டைட்டிலில் உருவான படம் தான் மகாநதி. 1994-ல் கமலின் நண்பரான சந்தான பாரதி இயக்கிய இப்படம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் படைப்பு. ஒரு தந்தை தனது மகளை எந்தக் கோலத்தில் பார்க்கக் கூடாதோ அந்தக் கோலத்தில் மகளைப் பார்த்து உருகி அழும் காட்சியில் உலக நாயகன் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கி விடுவார்.

மேலும் ஜெயில் சீன்களும் நம்மை உச் கொட்ட வைக்கும். ஒரு தந்தையாக கமலின் நடிப்பும், அதற்கு மெருகேற்றும் விதமாக இசைஞானியின் இசையும் நம்மை வேறொரு தளத்தில் எடுத்துச் செல்லும். கமல்ஹாசனின் பொக்கிஷங்களில் மகாநதிக்கு எப்பவும் தனி இடமே உண்டு.

அஜீத்துக்கு மிஸ் ஆன ஜீன்ஸ்.. இதுமட்டுமில்லாம படத்துல இத்தனை ரகசியங்கள் இருக்கா..!

இந்தப் படத்தின் டைட்டிலில் அப்படி என்ன சுவாரஸ்யம் தெரியுமா? இந்த படத்தோட முக்கியமான கேரக்டர் பெயர்களைப் பார்த்தால் விளங்கும். கமல் – கிருஷ்ணசாமி.. சுகன்யா – யமுனா.. கமல் மாமியாராக நடித்தவர் – சரஸ்வதி.. கமல் மகள் ஷோபனா – காவேரி.. கமல் மகன் – பரணி.. இறுதியாக கிருஷ்ணா.. யமுனா.. சரஸ்வதி.. காவேரி.. பரணி (தாமிரபரணி).. இப்படி நதிகள் கலந்து சங்கமித்த படம் தான் மகா நதி.

இப்போது புரிகிறதா கமல்ஹாசனை ஏன் இந்திய சினிமாவின் காட்பாதர் என்கிறோம் என்று. மேலும் தனது முதல் பட டைட்டிலேயே 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வைத்து விக்ரம் படம் மூலம் மீண்டும் வெற்றியை தன் வசமாக்கியவர்தான் உலக நாயகன். தசாவதாரம் பட டைட்டிலும் இதே பாணியில்தான் அடங்கும்.