இன்றும் இளமைத் துள்ளலுடன் ஜாலியாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம் பார்க்கலாம் என்றால் நமது முதல் சாய்ஸ் ஜீன்ஸ் திரைப்படம் தான். எந்த தலைமுறை கிட்ஸ்-க்கும் பிடித்த மாதிரியான ஒரு கதை, ஷங்கர் என்னும் பிரம்மாண்டம் என படம் இப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போல் தோன்றும். உலக அதிசயங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் உண்மையாகவே பல அதிசயங்களைக் கொண்டிருக்கிறது. இதில் தல அஜீத் தான் முதலில் நடிப்பதாக இருந்ததென்றால் நம்ப முடிகிறதா?
அப்பா-மகன் உறவு, இரட்டை குழந்தைகள் கான்செப்ட் போன்றவைகள் கதையின் மைய கருவாக இருந்ததால் படத்திற்கு ஆரம்பத்தில் Genes என்று டைட்டில் வைக்கலாம் என நினைத்தார்களாம்.பிறகு genes என்ற தலைப்பு வைத்தால் A சென்டர் ஆடியன்ஸை தவிர பிறருக்கு கனெக்ட்டிவிட்டி இருக்காது என்பதால் Jeans ஆக மாறியது.
அப்பாஸ், அஜித் என கதாநாயகர்கள் ஒரு புறம் மாறி இறுதியாக பிரஷாந்திடம் ஹீரோ வந்தது. மேலும் அப்பா கதாபாத்திரத்துக்கு இயக்குனரின் முதல் சாய்ஸ் கவுண்டமணி தான்.அமெரிக்காவில் ஷூட்,பல மாதங்கள் கால் ஷீட் போன்ற பல காரணங்களால் கவுண்டமணி நடிக்க முடியவில்லை.அவருக்கு பதில் நாசர் நடித்தார்.
கதையில், அமெரிக்காவிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில், கிருஷ்ணவேணி பாட்டிக்கு மூளையில் தவறான இடத்தில் மருத்துவர்கள் ஆப்பரேஷன் செய்துவிடுவார்கள்.அதை எதிர்த்து ஹீரோ பிரஷாந்த் உதவி செய்வது போல் கதை நகரும். படத்தின் முக்கியமான காட்சியும் இதுவே. இது அப்படியே ஒரு உண்மை சம்பவம்.
பார்ட் 2 எல்லாம் கிடையாது.. மூன்றே முக்கால் மணி நேரம் வச்ச கண் வாங்காம பார்க்க வச்ச எம்.ஜி.ஆர் படம்
நடிகை ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரிக்கு அமெரிக்காவில் மூளை அறுவை சிகிச்சை நடந்த போது மாற்றி ஆபரேஷன் நடந்துவிடும். அறுவை சிகிச்சை செய்த டாக்டர்,வேறொரு நோயாளியின் X-RAY ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு தவறான சிகிச்சை அளித்துவிட்டார். பிறகு வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மூளையில் இருந்த TUMOUR -ஐ அகற்றி நலமாக வீடு திரும்பினார். இதை அப்படியே ஷங்கர் இந்த படத்தில் காட்சிப்படுத்திருப்பார்.
இந்த படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி வரலாறு எழுதலாம். அவ்வளவு விஷயங்கள்உள்ளன. உதாரணத்திற்கு,கொலம்பஸ் கொலம்பஸ் பாடல் முழுக்க அமெரிக்காவில் எடுத்தது போல் இருந்தாலும்,அந்த பாடல் நம்ப பாண்டிச்சேரியில் தான் படமாக்கப்பட்டது. அதே போல் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலில் ஏழு அதிசயங்கள் படமாக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்தாலும்,பலருக்கும் தெரியாத ஒரு விடயமும் இருக்கின்றது.
இந்த பாடல் எந்தெந்த நாடுகளில் படமாக்கப்பட்டதோ ஐஸ்வர்யா ராய் அந்தந்த நாட்டின் ராணி கெட்-அப்பில் நடனமாடிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜீன்ஸ் ஒரு உலக அதிசயம்தான்.