நாளை மலர்கிறது மார்கழி….. இந்த ஒரு மாதத்தில் மட்டும் தரிசித்தால் ஒரு ஆண்டுக்கான பலன் நிச்சயம்…!

மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாதத்தில் தான் தேவர்கள் கண்விழிக்கிறார்கள். இந்த மாதத்தில் நாம் வழிபாடு செய்வதால் உடனடி பலன்கள் கிடைக்கும். ஆதித்ய பகவான் வியாழனோட வீட்டில் சஞ்சரிக்கிற காலம்.…

Markali1 kolam

மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாதத்தில் தான் தேவர்கள் கண்விழிக்கிறார்கள். இந்த மாதத்தில் நாம் வழிபாடு செய்வதால் உடனடி பலன்கள் கிடைக்கும். ஆதித்ய பகவான் வியாழனோட வீட்டில் சஞ்சரிக்கிற காலம்.

இந்த மாதத்தில் நாம் வேண்டினால் பலன்கள் கிடைக்கும். அதிலும் பிரம்மமுகூர்த்த காலைப்பொழுதில் வழிபாடு செய்தால் நமக்கு அதீத பலன்கள் கிடைக்கிறது.

அந்த வகையில் நாளை (17.12.23) அற்புதமான அந்த மார்கழி மாதம் ஆரம்பிக்கிறது.
14.1.2024 வரை 29 நாள்கள் இந்த மாதம் உள்ளது.

வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பால் காய்ச்சுவது, கிரகப்பிரவேசம், புது வீட்டுக்கு குடி புகுதல் என இந்த மாதிரியான விஷயங்கள் மட்டும் செய்யக்கூடாது.

கார், பைக் எல்லாம் வாங்கலாம். வளைகாப்பு நடத்தலாம். இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டியவற்றில் முக்கியமான 3 விஷயங்கள் உள்ளன.

இந்த மாதத்தில் தான் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி என நிறைய அற்புதமான நாள்கள் வருகின்றன. அதனால் இது ஆகாத மாதம் அல்ல. இறைவழிபாட்டுக்கு உகந்த மாதம்.

Aruthra
Aruthra

இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டுமா என்று சந்தேகம் எழலாம். அதை அனுபவத்தில் தான் உணர முடியும். அதற்குரிய பலன் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மார்கழிக்குள் நாம் உணர்ந்து விடலாம்.

தினமும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் வாசலில் 2 தீபம் ஏற்றுங்கள். வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வீடு முழுக்க சாம்பிராணி போடுங்கள். எந்தத் தெய்வத்தை வழிபடுவீர்களோ அதே போல காலை 10 நிமிடம் வழிபடுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வரும்போது நமது வேண்டுதல்களை அப்போது வேண்டினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

மார்கழி மாதம் ஏதாவது ஒரு கோவிலுக்கு தனுர்மாத பூஜைக்குக் கொடுப்பது மிகவும் உத்தமம். அந்தக் கோவிலுக்கு அரை லிட்டர் பாலாவது வாங்கிக் கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
இந்த ஒரு மாதம் வழிபடுவது அந்த ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

அடுத்தது அன்னதானம். நமது பிறவி வினைகளைக் கழிப்பது தான் இது. வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி என பல விசேஷ தினங்கள் வருகிறது. அந்த நாளில் அன்னதானம் செய்யலாம். அல்லது ஏதாவது ஒரு நாளில் இப்படி அன்னதானம் செய்யலாம். இப்படி அன்னதானம் செய்தால் பரம்பரைக்கே அன்ன குறை இருக்காது என்று சொல்வார்கள்.