லால் சலாம் வீடியோவும் வந்துருச்சு!.. தலைவர் 171 பார்த்து செய்வாரா லோகேஷ் கனகராஜ்?

By Sarath

Published:

சுமார் 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர் நடிகர் ரஜினிகாந்தை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு முன் ஒன்றாகத் திரண்டு வெளியே வா தலைவா என கோஷமிட்டனர். ரஜினிகாந்த் வரவில்லை என்றால் இங்கே உயிரை விட்டு விடுவேன் என்றும் ஒரு சில தீவிர ரசிகர்கள் கூச்சலிட்டு நிலையில், ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அனைவருக்கும் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல ஃபைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்து தலைவர் ஊரில் இல்லை என சொல்லி அனுப்பி வைத்தனர்.

வேட்டையனை தொடர்ந்து லால் சலாம் வீடியோ

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டு அறிமுகம் டீசரும் வெறித்தனமாக வெளியானது. இந்நிலையில், அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே சொல்வதற்காக மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்திலிருந்து ரஜினிகாந்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளையும், அவர் தொழுகை செய்யும் காட்சியையும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையுடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார்.

லால் சலாம் மற்றும் தலைவர் 170 படங்களின் வீடியோ காட்சிகளை பார்த்து சந்தோஷத்தில் மிதக்கும் ரசிகர்கள் தலைவர் 171 படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் கொடுப்பாரா என்கிற கேள்வியை சமூக வலைத்தளங்களில் தற்போது எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

வரும் பொங்கலுக்கு ஐஸ்வர்யா ராஜியை இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கேமியோ ரோலில் ரஜினி நடித்துள்ள தாசில்தார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சம்மருக்கு தலைவர் 170 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தலைவர் 171 வது படம் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

73 வயதிலும் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் ரஜினிகாந்த் உழைத்து வருவது பல சீனியர் சிட்டிசன்களுக்கு வியப்பை கொடுத்து வருகிறது. இன்னும் பல ஆண்டுகள் இதே ஆரோக்கியத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புதிய படங்களை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.