பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி!.. பிரபாஸ் படத்துக்கு இப்படியொரு சான்றிதழா?

By Sarath

Published:

பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ் . டார்லிங் என்றே அவரை ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். ஆனால், இனிமேல் அப்படி அழைப்பார்களா என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு மோஸ்ட் வயலென்ட் மேனாக சலார் படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ்.

இயக்குநர் ராஜமெளலி படங்களில் நடித்தாலே அந்த நடிகர்கள் பான் இந்தியா ஸ்டாராகவும் பான் வேர்ல்ட் பிரபலமாகவும் மாறிவிடுகின்றனர். ராஜமெளலியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர்களுடன் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரபாஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கேஜிஎஃப் பட இயக்குனருடன் கைகோர்த்த நிலையில், வரும் டிசம்பர் 22ம் தேதி சலார் படம் வெளியாகிறது.

சலார் வசூல் பாதிக்குமா?:

இந்த ஆண்டு டோலிவுட்டில் வெளியான எந்தவொரு படமும் பெரிய வெற்றியை பெறவில்லை என்கிற நிலையில், ஆண்டு இறுதியில் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கிறார் பிரபாஸ்.

ஏற்கனவே அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தை இந்தி தயாரிப்பாளரும் இயக்குனரும் உருவாக்கி இருந்தனர். அந்த படம் அனிமேஷன் படமாக இருந்த நிலையில், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. மேலும், ஏகப்பட்ட சர்ச்சைகளும் வெடித்தன.

இந்நிலையில், அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் சமீபத்தில் வெளியான சலார் படத்தின் மிரள வைக்கும் டிரெய்லர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தது. வரும் டிசம்பர் 22ம் தேதி மிகப்பெரிய ஓபனிங்கை சலார் படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு செக் வைக்கும் விதமாக இந்த படத்தை பாகுபலி போல குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஏ சான்றிதழ்:

ஆம், சலார் படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சலார் சீஸ் ஃபயர் எனும் பெயரில் உருவாகி உள்ள இந்த முதல் பாகத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, ஜகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதிகமான வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இருக்கும் என்பதால் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டார்லிங் பிரபாஸ் எப்படியாவது ராஜமெளலி இல்லாமல் ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என கடந்த 5 வருடங்களாக போராடி வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அது சாத்தியமாகும் என்றே தெரிகிறது.