பல்லி நம் உடலில் விழுவதால் தோஷம் ஏற்படும் என பெரியவர்கள் சொல்வார்கள், சில இடங்களில் பல்லி விழுந்தால் மரணம் ஏற்படும் கலகம் ஏற்படும் என்று பல்லி விழும் சாஸ்திரமும். தினசரி காலண்டர்களில் சொல்லப்பட்டிருக்கும் பலனும் நமக்கு கொஞ்சம் பீதியை ஏற்படுத்தும் என்றால் மாற்றுக்கருத்தில்லை.
பல்லி என்பது நவகிரகங்களில் கேது பகவானை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வட இந்தியாவில் தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை என்று கருதுகிறார்கள். வீட்டில் தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் அதிகம்.
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த பல்லியை பார்த்து வணங்கினால் பல்லி மேலே விழுந்து ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும் என்பது பொருள்.