ஜோதிடங்களில் பலவகை உண்டு அதில் முக்கியமானது வெற்றிலை ஜோதிடம் எனும் தாம்பூல பிரசன்னம். இந்த ஜோதிடம் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.பிரசன்ன ஜோதிடம் என்பது ஒருவர் வரும் நேரம்,கேள்வி கேட்கும் நெரம் பொறுத்து கணிதம் போட்டு பலன் சொல்வதாகும்.
அதுபோல தனக்கு திருமணம் ஆகுமா, ஏன் குழந்தை பிறக்கவில்லை, இப்படி வாழ்வியல் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளுடன் தன்னை சந்திக்க வருபவர்களை குறிப்பிட்ட வெற்றிலைகளோடு ஜோதிடர் வர சொல்கிறார். அவர்கள் கடைகளில் யதார்த்தமாக வெற்றிலை என்று கேட்டவுடன் அவர் சொல்லும் அளவு வெற்றிலைகளை அப்படியே எடுத்து கொடுத்து விடுவார். இல்லை என்றால் நாம் பார்த்து பார்த்து வாங்கினாலும் வெற்றிலையில் ஏதாவது சிறு குறைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் அந்த வெற்றிலைகளை வாங்கி கொண்டு அப்படியே ஜோதிடரிடம் கொடுத்தால் நாம் வாங்கி சென்றிருக்கும் வெற்றிலைகளில் உள்ள புள்ளிகள், கோடுகள், இது எதுவுமே இல்லாத சுத்தமான வெற்றிலைகள், அது போக நாம் எந்த நேரம் அவரை சந்தித்துள்ளோம் என பல விசயங்களை வைத்து கணித்து சொல்லப்படுகிறது.
இதுவே வெற்றிலை ஜோதிடம் ஆகும் பல இடங்களில் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.