பிறந்த ஜாதகத்தில் சில தோஷங்கள் இருந்தால் அந்த தோஷங்கள் கடைசி வரை நம்மை கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். என்னதான் தோஷம் கழித்தாலும் வழிபாடுகளை செய்தாலும் அவ்வப்போது ஏதாவது சிறு சிறு துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். இது மனித வாழ்வில் இயல்பாக நடக்கும் ஒரு விசயம்.
உங்கள் துன்பங்களை களைய சிறந்த வழி திருவண்ணாமலை கிரிவலம் செல்வதுதான். கிரிவலம் நாங்களும் செல்கிறோம் என பெளர்ணமிக்கு அன்று பக்கோடா வாங்கி சுவைத்துக்கொண்டு 14 கிமீ நடக்க கூடாது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை குறைத்து இறைபற்றிய பேச்சுக்களையும் நினைப்புகளையும் பேசி செல்ல வேண்டும்.
அர்த்தமற்ற தேவையில்லாத விசயங்களை கிரிவல நேரத்தில் பேசி செல்ல கூடாது. மாதா மாதம் பெளர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது என்றாலும் கடுமையான துன்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு கால நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரிவலத்துக்கு கிளம்பி விட வேண்டும்.
மாதா மாதம் வரும் துவாதசி திதியன்று அண்ணாமலையில் கிரிவலம் செய்து இல்லாதவர்களுக்கு அன்னதானம் கொடுத்தால் சிறப்பு என ஆன்மிகவியலாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
மலையை சுற்றி 24 மணி நேரமும் சித்தர்களும் முனிவர்களும் வலம் வந்து கொண்டே இருப்பதாக ஐதீகம். அதிகாலை 4 மணிக்கோ மாலை 5 மணிக்கோ ராஜகோபுரத்தில் கிரிவலம் ஆரம்பித்து பின்பு ராஜகோபுரத்திலேயே முடிப்பது சிறப்பு.
இப்படி அண்ணாமலை கிரிவலம் தொடர்ந்து சென்று வரும்போது ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் மாறும்.