ஒருவருக்கு ஜாதக ரீதியாக பல பிரச்சினைகள் இருக்கும். கிரகங்களின் வலிமை அந்த மாதிரி எப்படிப்பட்ட பிரச்சினைகளையாவது இழுத்து விட்டு விடும், செவ்வாய்தோஷம், மாங்கல்யதோஷம், நாகதோஷம் என பல தோஷங்கள் மனிதனுக்கு உண்டு. அந்த தோஷங்கள் எல்லாம் நம்முடைய கர்மாரீதியாக நம்முடன் வந்து ஒட்டிக்கொள்கிறது. இதனால் திருமணம் ஆகாமல், குழந்தை இல்லாமல் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தோஷங்கள் பல வகை இருக்க இந்த புனர்பூ தோஷம் என்பது வித்தியாசமானது. அதாவது திருமணம் நிச்சயம் ஆகி ஏதாவது ஒரு வகையில் திருமணம் நின்று விடுவதுதான் இந்த புனர்பூ தோஷம். திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணோ, மாப்பிள்ளையோ எனக்கு திருமணம் வேண்டாம் எங்காவது ஓடி விடுவது, திடீரென சம்பந்த வீட்டார்களுக்குள் ஏற்படும் கடும் பிரச்சினைகள் இதனால் திருமணம் நின்று விடுகிறது.
திருமணத்திற்கு பின் தம்பதியருள் யாருக்காவது உடல் நீலை, அதாவது தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே காலமாவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் திருமணமே நடக்காமல் போவது போன்றவை ஏற்படுகின்றது.
புனர்பூ தோஷம் எவ்வாறு ஏற்படுகின்றது?
புனர்பூ தோஷம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் மனோகாரகனான சந்திரனுடன் ஆயுள் காரகனான சனியும் இணைந்து எங்கே இருந்தாலும புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. சனி சந்திரனை ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்ப்பது, சனி மட்டும் சந்திரனை தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையால் சந்திரனை பார்ப்பது, இது போல காரணங்களால் புனர்பூ தோஷத்தை ஏற்படுத்துகிறது
புனர்பூ தோஷத்தில் கடுமையான புனர்பூ தோஷமும் உள்ளது அது எவ்வாறு உருவாகிறது என பார்ப்போம்.
பொதுவாக சனி சந்திரன் இணைந்து இருப்பதே புனர்பூ தோஷத்தை உண்டாக்குகின்றது அதிலும், கடுமையானது என்று பார்க்கப் போனால் சந்திரன் நீசம் பெற்று அதாவது நீசச் சந்திரனை சனி பார்ப்பது அல்லது சனி நீசம் பெற்று அதாவது நீச சனியை சந்திரன் பார்ப்பது, மற்றும் குடும்ப ஸ்தானத்தில் இவ்வாறு அமையப் பெறுவது, அதே போன்று சனி வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சந்திரன் வீட்டில் சனி இருப்பது, இவர்களை குரு பார்க்காமல் இருந்தால் நிச்சயமாக கடுமையான புனர்பூ தோஷத்திற்கு ஆளாகின்றார்கள்.
இவ்வாறு அமையப் பெற்ற ஜாதகர்கள் சனி காயத்ரி மந்திரத்தை அனுதினமும் சொல்லி துதிப்பது நல்லது
சனி காயத்ரி மந்திரம்
காகத் வஜாய வித்மஹே
கட்க ஹ’ஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்
சனி ஸ்துதி
நீலாஞ்சன சமா பாசம்
ரவிபுத்ரம் யமாக்ஞ்ரஜம்
சாய மார்த்தாண்ட தம் பூதம்
தம் நமாமி சனைஸ்வரம்
மேலே கூறிய ஸ்லோகங்களை தினமும் 27 முறை படித்து புனர்பூ தோஷத்தால் விடுதலை பெறுங்கள்.