ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அடுத்ததாக உள்ள மிக முக்கியமான ஊர் ஸ்ரீகாளஹஸ்தி இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் வாயுஸ்தலம். இங்குதான் இந்திய அளவில் அதிகம் பேர் வந்து ராகு கேது பரிகாரம் செய்து கொள்கிறார்கள். பிரபல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் புள்ளிகள், தொழில் அதிபர்கள் , பாமர மக்கள் என பலரும் இங்குதான் அதிகம் ராகு கேது பரிகாரம் செய்து கொள்கின்றனர்.
இந்து புராணத்தின் படி, வாயு மற்றும் ஆதிசேசன் ஆகிய இருவருக்க்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிப்பதற்கும், தங்களின் மேன்மையை நிரூபிக்க ஆதிசேசன் கைலாசத்தை சுற்றி வளைத்துக் கொண்டார். வாயு புயல் காற்றை உருவாக்கி அதை அகற்ற முயன்றார். புயல் காற்று காரணமாக கைலாசத்திலிருந்து, ஆதிசேசனின் உடல் உடலின் 8 பாகங்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்தன. திருக்கோணமலை, ஸ்ரீகாலஹஸ்தி, திருச்சிராப்பள்ளி, திருஈங்கோய்மலை, ராஜாத்தகிரி, நீர்த்தகிரி, ரதனகிரி, மற்றும் சுவேதகிரி திருப்பைஞ்ஞீலி. என்று கூறப்படுகிறது.
இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாக கூறப்படுகிறது இப்படி நாகம் சம்பந்தப்பட்ட இடமாக இக்கோவில் இருப்பதால் இங்கு ராகு கால வேளையில் பரிகாரம் செய்ய நிறைய கூட்டம் வருகிறது.
பரிகாரம் செய்யும்போது கோவிலில் ராகு கேது தோஷத்திற்கான பரிகார பூஜை டிக்கெட் 800 ரூபாய் அளவில் இருக்கும் அந்த டிக்கெட்டை வாங்கி பரிகார பூஜை செய்ய பூஜை பொருட்கள் அடங்கிய பை ஒன்றும் தருவார்கள். அதை வாங்கி கொண்டு பரிகார பூஜை செய்யும் இடத்தில் நின்றால் நம்மை வரிசையாக அழைத்து பூஜை செய்வார்கள். பூஜை செய்வதற்கு முன்பு கீழே உள்ள பாதாள விநாயகரை வணங்கி விட்டு வந்து செய்வது நலம். பின்பு பூஜை முடிந்த பிறகு சிவனையும் அம்பாளையும் வணங்கி செல்ல வேண்டும்.