இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூரணமான ஐஸ்வரியம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி என்றெல்லாம் பொரு ளுண்டு. பகமாலினி தேவி வழிபாடு கேரளப்பகுதிகளில் அதிக பிரசித்தம். பகமாலினி தேவியை வழிபட்டால் அனைத்தும் சிறக்கும். செல்வ வளம் பெருகும்.
இவளின் இந்த மந்திரத்தை சொன்னால் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும்.
ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
சுக்ல பட்ச துவிதியை, கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதிகளில் வழிபட வேண்டும்.