இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரன்ரேட் நன்றாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியாவின் பவுலிங், பீல்டிங் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா சற்றுமுன் அவுட் ஆன நிலையில் அவர் தனது உலக கோப்பையில் கடைசி பேட்டிங்கை நிறைவு செய்தார். இன்று அவர் அடித்த 47 ரன்களுடன் மொத்தம் அவர் இந்த உலக கோப்பையில் 597 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் அதில் குறிப்பாக பவர் ப்ளேயில் மட்டுமே 401 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 முதல் 10 வரையிலான முதல் பவர் ப்ளேயில் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாசி அவர் 401 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் போட்டு கொடுத்தார். மொத்தம் அவர் 297 பந்துகள் சந்தித்துள்ளார் என்பது 135 க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இந்த உலக கோப்பை தொடரில் 24 சிக்சர்களையும் அடித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை அவர் தனது முழு திறமையை நிரூபித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவி செய்துள்ளார் என்பது மட்டுமின்றி கேப்டன்ஷிப்பில் அசத்தியுள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு அவரது கேப்டன்ஷிப் மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்மேன் ஆகவும் ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ள நிலையில் அவரது இந்த உழைப்புக்கு உலகக்கோப்பை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
