தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜிஆர்- சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக போட்டி நடிகர்களாக நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் பிரபலம் அடைந்துள்ளனர். இவர்களுக்கிடையே சிறந்த நட்புறவு இருந்தாலும் சினிமா துறையில் போட்டி நடிகர்களாக ஒருவருக்கொருவர் சலித்துக் கொள்ளாமல் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லாங் சலாம் திரைப்படத்தில் ரஜினி கேமியோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. அடுத்ததாக ரஜினி ஞானவேலு இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.
அதேபோல் நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலின் திரை வாழ்க்கைக்கு கம்பேக் கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து ஹச் வினோத் இயக்கத்தில் 233 வது திரைப்படம், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 234 வது திரைப்படம் என அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். இதற்கிடையில் கமல் பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு மட்டுமே நடிகர் கமலஹாசன் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் கமல் திரைப்படங்களை கொண்டாட இன்றளவும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினி மற்றும் கமல் இளம் இயக்குனர் இணைந்து இந்த காலத்திற்கு ஏற்ற போல பல வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகின்றனர். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி மற்றும் கமல் அவர்கள் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் இவர்களின் தொடக்க கால திரைப்படங்களில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து சில தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் என்றால் நம் நினைவிற்கு வருவது 16 வயதினிலே திரைப்படம் தான். ஆனால் இந்த 1977-இல் வெளியானது. ஆனால் இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மூன்று முடிச்சு திரைப்படம் வெளியாக இருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்திருப்பார்கள். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கமல் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். ஸ்ரீதேவி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் இணையும் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான்!
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினி, நடிகை ஸ்ரீதேவி அவர்களிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவி இடமும் அவர் அம்மாவிடமும் நல்ல முறையில் பேசி வந்துள்ளார்.அப்பொழுது ஹீரோவாக நடித்து வந்த நடிகர் கமலஹாசனுக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது. கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவிக்கு 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நடிகர் ரஜினிக்கு வெறும் 2000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்து ரஜினி ஸ்ரீதேவியின் அம்மாவிடம் நான் எப்போது தான் நடிகர் கமலஹாசன் போல் முன்னணி நடிகராக வருவேன் என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார். அதற்கு ஸ்ரீதேவியின் அம்மாவும் உன் திறமைக்கு நீ கூடிய விரைவில் முன்னேறி விடுவாய் என்று ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த தகவலை நடிகை ஸ்ரீதேவி ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார். இப்படி அடிமட்ட சம்பளத்திலிருந்து படிப்படியாக உயர்ந்த ரஜினிகாந்த் இன்றளவு சூப்பர் ஸ்டார் ஆக தென்னிந்திய திரை உலகில் பிரபலத்தின் உச்சத்தில் கொடி கட்டி பறந்து வருகிறார்.