தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னராக வலம் வந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் திரைப்படங்களுக்கு இன்றளவும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உள்ளது. நடிப்பின் ஜாம்பவான் ஆகிய நடிகர் திலகம் ஏற்றுக்கொண்டு நடித்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் தான். இதெல்லாம் ஒருபுறம் இருக்க படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சிவாஜி, படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து இன்றளவு சூப்பர் ஸ்டார் ஆக நம் மனதில் நிலைத்திருக்கும் ஹீரோ தான் ரஜினிகாந்த். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வலம் வருகிறார். சினிமாவின் தொடக்க காலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். உதாரணமாக நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா போன்ற திரைப்படங்களில் இருவரின் நடிப்பும் போட்டி போடும் விதத்தில் அமைந்திருக்கும்.
அதிலும் குறிப்பாக நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் சிவாஜி ஹீரோவாகவும், கே ஆர் விஜயா ஹீரோயின் ஆகவும் நடித்திருப்பார்கள். தா. யோகானந்த் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பின் ரஜினியின் காட்சிகள் அமைந்திருக்கும், குறிப்பாக இறுதி காட்சிகள் 20 நிமிடம் ரஜினியை மையமாக வைத்து தான் கதை முழுவதுமாக நகர்ந்து செல்லும். இந்த படத்தில் ரஜினியின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.
இந்த படத்தின் படப்பிடிப்பை பார்த்த நடிகர் திலகம் ரஜினியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் கண்டிப்பாக நடிகர் ரஜினியை கொண்டாடுவார்கள் என்றும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டு தனக்குரிய காட்சிகள் முடிந்ததும் தனது காரில் வீடு திரும்பியுள்ளார். இதைப் பார்த்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தில் ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து நடிகர் திலகம் படப்பிடிப்பிலிருந்து கோபத்தில் தான் செல்வதாக தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கோபத்தில் செல்வதாக தவறாக நினைத்துக் கொண்ட தயாரிப்பாளரும், இயக்குனரும் உடனே சிவாஜியை நேரில் சந்தித்து இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் சில பகுதியை நீக்கி கொள்வதாகவும், நேரத்தை குறைத்துக் கொள்ளலாம் என சிவாஜி இடம் கூறியுள்ளனர். அதற்கு சிவாஜி ஏன் குறைக்க வேண்டும், எந்த காட்சிகளையும் குறைக்க கூடாது, எந்த காட்சிகளையும் நீக்க கூடாது. நடிகர் ரஜினி சிறப்பாக நடித்துள்ளார். மேலும் அவர் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் இந்த படத்தின் மூலமாக அவருக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி படத்தில் எந்த காட்சிகளையும் நீக்க அனுமதிக்காமல் படத்தை அப்படியே வெளியிட அனுமதி கொடுத்துள்ளார்.
இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் இணையும் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான்!
சிவாஜியின் பெருந்தன்மையை பார்த்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் அந்த இடத்தில் வியந்து உள்ளார்கள். இந்த படமும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி மைக்கேல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாஜி அவர்களை எவ்வளவு கொண்டாடினார்களோ அதே அளவு ரஜினிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
தன்னுடைய திரைப்படத்தில் தன்னை பற்றி மட்டுமே நினைக்காமல் மற்ற கலைஞர்களும் நல்ல நிலைக்கு வர வேண்டும் முன்னேற வேண்டும் என நினைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெருந்தன்மையில் உச்சத்தை தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.