வாரணம் ஆயிரம், விடிவி படத்துல இதையெல்லாம் கவனிச்சுரூக்கிங்களா? கௌதம்மேனன் படத்திலும் குறியீடுகள்

By John A

Published:

முன்பு தியேட்டருக்கு வந்தோமா படத்தைப் பார்த்தோமா ரசித்தோமா என்று மட்டும்தான் ரசிகனின் பார்வை இருந்தது. ஆனால் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியாலும், சமூக மாற்றத்தினாலும் திரைப்படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியும், வசனமும் ரசிகனை எவ்வாறு சென்று சேர்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

வசனங்களும், காட்சிகளும் யாரை இழிவு படுத்தாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுக்க வேண்டியுள்ளது. இதனால் படைப்பாளிகளின் சுதந்திரம்சற்று கேள்விக்குறியாகி உள்ளது.

இயக்குநர்கள் தங்களது படைப்புகளில் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன மாதிரியான இடம் வேண்டும், காட்சியில் பின்னணியில் என்ன புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என பலவாறு சிந்தித்து தான் காட்சிகளை எடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் அப்படி எடுத்தும் கூட சில காட்சிகளில் பின்னணியில் உள்ள புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

இதற்கு சமீப உதாரணம் ஜெய்பீம். ஒரு காட்சியில் வரும் காலண்டர் படம் ஒரு குறிப்பிட்ட சாதியை உணர்வுகளைத் தூண்டுவதாக அமைந்து பல விமர்சனங்களுக்கும், அரசியல் தலையீடுகளுக்கும் உள்ளானது.

அதேபோல் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரது படங்களில் அம்பேத்கார், புத்தர் ஆகியோரது கொள்கைகளை பறைசாற்றும் விதமாக குறியீடுகள் இருக்கும். ஆனால் கௌதம் மேனன் படத்திலும் குறியீடுகள் உள்ளதென்றால் நம்ப முடிகிறதா?

சின்னக் கலைவாணருக்கு இப்படி ஓர் இளகிய மனமா? குமரிமுத்து சொன்ன உண்மை

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா கிட்டாரை வைத்துக் கொண்டு என் இனிய பொன் நிலாவே பாடலைப் பாடிமுடித்தவுடன் அந்த கிட்டாரிண் காயினை, தனது பேன்ட் பாக்கெட்டில் வைப்பார். சற்று கவனித்து பார்த்தால் தெரியும், அங்கு மேஸ்ட்ரோ (Maestro) என எழுத பட்டிருக்கும். இது மேஸ்ட்ரோ இளையராஜா அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்கும்.

Surya

அதேபோல் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் ஒரு சீன். சிம்பு ஒரு காட்சியில் திரிஷா அண்ணனுடன் சண்டை செய்யும் முன்னர் தான் ஒரு பாக்ஸர் என சொல்லுவார். இது திடீரென சண்டை காட்சிக்கன வைத்தது போல் தெரியும். ஆனால் இதற்கு முன்னாடி பல காட்சியில் அவரின் வீட்டு போஸ்டர்களில் மார்டின் கோர்ச்சசெ (Martin Scorsese) மற்றும் மைக் டைசன் (Mike Tysen) காட்டி இருப்பார்.

vtv

இவ்வாறு கௌதம் வாசுதேவ் மேனன் படங்களிலும் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.