கை ரேகை ஜோதிடத்தில் புத்தி ரேகை கூறுவது என்ன?

கை ரேகை என்பது ஜோதிடத்தில் உள்ள ஒரு பிரிவு என்பது அனைவரும் அறிந்ததே…. இந்த கை ரேகை ஜோதிடத்தில் நம் கையில் உள்ள ரேகையை வைத்து நமது ஜாதகத்தை கூற முடியும். நம் கையில்…

2e6b61a6ecd768ce714ee1022a636086

கை ரேகை என்பது ஜோதிடத்தில் உள்ள ஒரு பிரிவு என்பது அனைவரும் அறிந்ததே…. இந்த கை ரேகை ஜோதிடத்தில் நம் கையில் உள்ள ரேகையை வைத்து நமது ஜாதகத்தை கூற முடியும்.

நம் கையில் உள்ள ஒவ்வொரு ரேகைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த ஒவ்வொரு ரேகையையும் வைத்து நம்முடைய குண நலன்களையும், நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் கூற முடியும்.

நம் கையில் உள்ள பல ரேகைகளில் சிலவற்றை முன்னாட்களில் பார்த்தோம். இப்போது நம் கையில் உள்ள புத்தி ரேகை என்ன கூறுகிறது என்பதை பற்றி பார்ப்போமா…

புத்தி ரேகை என்பது எதுவென்றால் குரு மேட்டின் அடிப் பக்கத்தில் ஆயுள் ரேகையை ஒட்டி செல்ல கூடிய ரேகை தான் புத்தி ரேகை என்கிறோம். இந்த ரேகையும் தடிமனாக இருப்பதைக் காட்டிலும் லேசாக இருப்பது நல்லது.

இப்படி இருந்தால் அவர்கள் நல்ல அறிவாளியாகவும், மிகுந்த ஞாபகச் சக்தி உடையவராகவும் இருப்பார்கள். மேலும் இந்த புத்தி ரேகை மூளையின் செயலையும், அது வேலை செய்யும் திறனையும், நம் மனநிலை எப்படி உள்ளது என்பதையும் சுட்டிக்  காட்டுகிறது. உள்ளங்கையில் உள்ள இந்த புத்தி ரேகை ஆனது மிகவும் விசேஷமானது.

எனவே தான் ஒருவருக்கு உள்ளங்கையில் உள்ள இந்த ரேகை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன