நம்முடைய வாழ்க்கை கஷ்டம், நஷ்டம் மற்றும் சந்தோஷம் போன்ற பல குண நலன்களை கொண்டது. சிறிது நேரம் மகிழ்ச்சியாய் இருந்தால் போதும் அடுத்த நொடியே நமக்கு எங்கிருந்து தான் துன்பம் வந்து சேருமோ என்று எண்ணும் அளவிற்கு சந்தோஷமும், துக்கமும் மாறி மாறி வரும்.
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியால் மட்டும் நிரம்பி இருந்தால் அது எப்படி சுவாரஸ்யமானதாக இருக்கும். அதனால் தான் கடவுள் நம் வாழ்க்கையை இப்படி அனைத்தும் நிறைந்ததாய் படைத்துள்ளார்.
மேலும் இந்த எல்லா செயல்களுக்கும் நம் ஜாதகமும் ஒரு வகை காரணம் எனலாம். புரியும்படி சொன்னால் நம்முடைய வாழ்க்கை எல்லாமும் நிறைந்ததாய் அமைய வேண்டும் என்பதற்காகவே ஜாதக கிரகநிலையை கடவுள் வடிவமைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இதை எல்லாம் எப்படி நம்புவது, கடவுள் என்று ஒருவர் உள்ளாரா அல்லது ஜாதகம் என்பது உண்மையா என்று நம்மில் சிலர் கேள்வி எழுப்புவர். நம்முடைய பூமியே ஒரு இயக்க சக்தியால் ஆனது. இந்த இயக்கம் மட்டும் இல்லையென்றால் எப்படி இருக்கும். நினைத்து பார்க்கவே பெரும் வியப்பாக இருக்கும். அதாவது ஒன்றை மட்டும் நினைவு கூர்ந்து பார்ப்போம், இரவு பகல் மாற்றம் இல்லையேல் என்ன நடக்கும்.
மேற்கூறிய அனைத்தும் எப்படி உண்மையே அதுபோலத் தான் நம்முடைய ஜாதகமும் உண்மை. எனவே தான் ஜாதகமும், ஜாதக கிரக நிலைகளும் வாழ்க்கையில் மிக மிக முக்கியம். நாம் சில நாட்களாகவே யோகங்கள் பற்றி தான் பார்த்து வருகிறோம். மீதம் உள்ள யோகங்களை நாம் பின்வரும் நாட்களில் பார்க்கலாம்.