மாடலிங் துறையில் மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் போன்ற பட்டங்கள் இந்திய பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த நிலையில் 1994-ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணி யாரென்றால் அது உலக அழகி ஐஸ்வர்யாராய் தான். மாடலிங் துறையில் நுழையவே தயக்கம் காட்டிய பெண்களுக்கு மத்தியில் தன்னுடைய அழகு மற்றும் திறமையால் இந்த துறையில் உலக அரங்கில் வெற்றிக் கொடி நாட்டியவர் ஐஸ்வர்யா ராய்.
ஆரம்பகால வாழ்க்கை
கர்நாடா மாநிலத்தில் மங்களூர் நகரில் நவம்பர் 1,1973-ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யாராயின் குடும்பம் துளு மொழி பேசும் பன்ட் இனத்தைச் சார்ந்தது. இவரது குடும்பம் பின்னாளில் தொழில் நிமித்தமாக மும்பைக்கு குடிபெயற அங்கயே படிப்பை முடித்து செட்டிலானார். மாடலிங் துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக விளம்பரப் படங்களில் தலைகாட்டிய இவரை உலக அழகி வரை கொண்டு சேர்த்தது இவரது அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் தான்.
அப்படித்தான் உலக அழகியாக இவர்1994-ம் ஆண்டு மகுடம் சூடிய போது இந்திய பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த பட்டம்போல் ஐஸ்வர்யாராயை கொண்டாடினர். இவரது கண்களின் அழகில் இளைஞர்கள் பலர் சொக்கிப் போயினர். இன்றும் இவர் கண்களைப் பார்த்தால் ஒரு காந்தம் போன்ற கவர்ந்திழுக்கும் சக்தி இருப்பது உண்மை எனலாம்.
அள்ளிக் கொண்ட தமிழ் சினிமா
இயக்குநர் மணிரத்னம் இருவர் படத்திற்காக புதுமுகத்தை ஹீரோயினாக தேடிக் கொண்டிருக்கும் போது உலக அழகியின் நினைவு வரவே முதன் முதலாக சினிமாவில் நடிக்க வைத்தார். மோகன்லால், பிரகாஷ்ராஜ், ரேவதி ஆகியோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தியில் பிரபல இயக்குநர்களின் படைப்பில் நடிக்கத் தொடங்கினார்.
இனி ஒரு உசிரும் போகக் கூடாது : படப்பிடிப்பு தளத்தில் அஜீத் எடுத்த அதிரடி முடிவு
பிரம்மாண்ட வெற்றி கொடுத்த ஜீன்ஸ்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் பிரசாந்தை இரட்டை வேடங்களில் ஜீன்ஸ் படத்தில் நடிக்க வைத்துக் கொண்டிருக்க ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார். ஜீன்ஸ் படம் வெளியாகி உலகெங்கும் சக்கைப் போடு போட இந்திய சினிமா உலகில் ஐஸ்வர்யாராயின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஐரோப்பா பாடலும், கண்ணோடு காண்பதெல்லாம், பூவுக்குள் ஒளிந்திருக்கும் போன்ற பாடல்களில் ஐஸ்வர்யாராய் கலக்கியிருப்பார். அதேபோல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் துள்ளலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திழுத்திருந்தார்.
அபிஷேக் பச்சனை கரம்பிடித்த ஐஸ்வர்யா
இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் வீட்டு மருமகளான ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சனை 2007ல் கணவராக கரம்பிடித்தார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து தற்போதைய ஹீரோயின்களுக்கும் சவால் கொடுத்தார். மணிரத்னம் தமிழில் மீண்டும் இராவணன் படத்தில் ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்து உலக அழகியை சினிமாவில் அடுத்த ரவுண்டு வரச் செய்தார். அதன்பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் எந்திரன், 2.0 படங்களில் கைகோர்க்க படம் பிளாக் பஸ்டர் ஆனது.
ஜெயிலர் எல்லாம் ஒதுங்கி நில்லு!.. கில்லியாக வசூல் அள்ளிய விஜய்.. இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லியோ!
மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகிய பொன்னியின் செல்வன் பாகம் 1,2 படங்கள் ஐஸ்வர்யாராயை தமிழ் சினிமா ரசிகர்களிடையே கொண்டாட வைத்தது. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் பழைய பாடலான எங்கே என் புன்னகை மீண்டும் டிரெண்டாக அதன் ஒரிஜினல் வெர்ஷனான தாளம் பட பாடல் ஐஸ்வர்யாராய் நடிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக மாடலிங் துறையில் நுழைந்து இந்திய சினிமாவையே தனது அழகால் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாராய் இன்று 50 வயதை தொடுகிறார்.