ஒருவருடைய வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நல்ல நாள் – இந்த நாள் தானா!

By Staff

Published:

b1b351a131ef5c500afe4efd27744607

நாம் தினமும் காலையில் துயில் எழும்போது ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் தான் எழுவோம். இந்த ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. 

நாம் செய்யும் நல்ல செயல்களை கூட நாள் பார்த்து செய்தால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும். இப்படி ஒரு நல்ல நாளான பௌர்ணமி திதி நாளில் நாம் என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்…..

பௌர்ணமி என்பது வெறும் முழு நிலாவுடன் கூடிய ஒளியை மட்டும் இவ்வுலகிற்கு தருவதில்லை. ஒருவருடைய வாழ்க்கையையே ஒளிரச் செய்யும் நல்ல நாள் இந்த பௌர்ணமி திதி நாள். இந்த நாளுக்கு அதிதேவதை பராசக்தி ஆவாள். 

இந்த நாளில் நம் குடும்பத்தின் நலனுக்காக அல்லது உலக நலனுக்காக ஹோமங்கள் செய்யலாம். எல்லா விதமான மங்கள காரியங்களிலும் ஈடுபடலாம்.  நாம் செய்யும் அனைத்து காரியமும் வெற்றி அடையும். 

அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நாளில் நாம் பிறருக்கு உதவி செய்தால் நம் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும்.

இந்த நாள் மட்டுமல்லாமல் நாம் இருக்கும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்து , நம் வாழ்க்கையில் புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் வாழும் வாழ்விற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். 

Leave a Comment