ஜோதிடத்தில் சதுர்த்தி திதி நாளில் என்ன செய்வது நல்லது….

By Staff

Published:

430831318cbad7c11eeb183d407b0071-2

நாம் வாழும் இவ்வுலகம் பல வியக்க தக்க யோசிக்க முடியாத சக்திகளை கொண்டது. அதாவது நாம் நினைத்து பார்க்க முடியாத பல கற்பனை அதியங்களை கொண்டது. 
இப்படியெல்லாம் இருக்குமா என்று யோசிக்கும் அளவிற்கு பல மாறுதல்களை உள்ளடக்கியது இந்த பூவுலகம். 

இந்த வியக்கதக்க அதியங்களில் நாம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது நம் வாழ்நாளை கணிக்கக் கூடிய ஜோதிடம்.  இந்த ஜோதிடத்தில் கூறப்படுகின்ற திதிகள் பற்றி தான் இரண்டு நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இன்று நாம் சதுர்த்தி திதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

சதுர்த்தி திதியில் எமதர்மன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் ராஜாவா இருப்பர். இந்நாட்களில் தான் முற்காலத்தில் மன்னர்கள் போர் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களாம்.

அப்படி இந்நாட்களில் போர் புரிவது தான் போரில் ஈடுபடும் இரண்டு நாடுகளுக்கும் நன்மை என்று கருதி இந்நாளில் போரில் ஈடுபட்டனர். அதாவது இந்நாள் எதிரிகளை வெல்வதற்கும், நெருப்பு சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவதற்கும், ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் மிகவும் ஏற்றது.

மேலும் ஒருவர் ஜாதகத்தில் கேது தோஷம் இருந்தால் விநாயகப் பெருமானை மாதந்தோறும் வருகின்ற சங்கடாசதுர்த்தி நாளில் வணங்கி வர கேது தோஷம் நீங்குமாம்.
 

Leave a Comment