நடிகர் சிவக்குமார் சூர்யா, கார்த்தியின் தந்தை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் நடிகர் சிவக்குமார் சினிமாவின் தென்னகத்து மார்கண்டேயன் என்பது தெரியுமா? 2K Kids -க்கு தெரியாத நடிகர் சிவக்குமாரின் திரைசாதனைகள் இதோ..!
பழம்பெரும் நடிகரான பழனிச்சாமி என்ற சிவக்குமார் கோவை மாவட்டத்தில் காசிகவுண்டன் புதூர் என்ற ஊரில் பிறந்தார். 1965-ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர் கதாநாயகனான நடித்த ‘காக்கும் கரங்கள்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற திரை ஜாம்பவான்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். இவரது நடிப்புத் திறமையால் விரைவிலேயே ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.
முதன் முறையாக சிவக்குமார் வில்லனாக நடித்த படம்…! ரஜினி, கமலுடன் இணைந்து நடித்து அசத்திய சுமித்ரா
எவர்கிரீன் சிந்துபைரவி
ஹீரோவாக பல படங்களில் நடித்து தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களையும், வெள்ளி விழா படங்களையும் கொடுத்தார். கந்தன் கருணை, திருமால் பெருமை, சரஸ்வதி சபதம் போன்ற பல பக்திப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். பழம் பெரும் நடிகர்கள் ஓய்ந்த காலத்தில் சிவக்குமார் 1980 களில் தனித்துவ நடிகராக வலம் வந்தார்.
ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை ஹீரோக்கள் உருவெடுக்க தனது அபார நடிப்புத் திறமையால் ரோசாப்பூ ரவிகைக்காரி, சிந்து பைரவி என எவர்கிரீன் ஹிட் படங்களைக் கொடுத்து சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இன்றும் 2K Kids களின் BAR ANTHEM ஆக விளங்கும் ‘தண்ணீர் தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்’ என்ற சிந்து பைரவி பட பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
பட்டிதொட்டிகளில் ஹிட் அடித்த ‘சித்தி‘
1990-களுக்குப் பிறகு விஜய், அஜீத் போன்ற ஹீரோக்கள் உருவாக சிவக்குமார் தனது நடிப்பின் அடுத்த பரிணாமத்தில் சென்றார். குணசித்திர வேடங்களில் நடித்தும், டிடி பொதிகையில் வெளிவந்த ‘எத்தனை மனிதர்கள்’ சீரியல் இவரை ஒவ்வொரு இல்லங்களிலும் சென்று சேர்த்தது. நடிகர் சிவக்குமாரை தங்கள் வீட்டு மனிதராக பார்க்க ஆரம்பித்தனர். அதன்பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ மெகா ஹிட் ஆகி அடுத்தடுத்து சீரியல்களிலும் பிஸியானார். இவ்வாறு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சிவக்குமார்.
செல்பி சர்ச்சை
சமீப காலத்திற்கு முன்பு ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றபோது செல் போனை கீழே தட்டி விட்ட சம்பவம் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன்களான சூர்யாவும், கார்த்தியும் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகின்றனர்.
நடிப்பு மட்டுமல்லாது ஆன்மீக சொற்பொழிவு, ஓவியங்கள் வரைதல், சிறந்த பேச்சாளர் போன்ற பன்முகங்கள் கொண்ட சிவக்குமாரை நாமும் மனதார வாழ்த்துவோம்.