நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான லியோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து 6 விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டு வசூல் வேட்டை நடத்தி உள்ளது.
லியோ திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் இன்னமும் எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
500 கோடி வசூல்
ஆனால், விஜய் ரசிகர்கள் கொண்டாடவும் ரஜினி ரசிகர்கள் திண்டாடவும் காரணமாக இருப்பது படத்தை இங்கிலாந்தில் வாங்கி வெளியிட்ட அஹிம்சா நிறுவனம் தொடர்ந்து அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டே இருப்பது தான் காரணம் என்கின்றனர்.1.36 மில்லியன் பவுண்டை லியோ இங்கிலாந்தில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் திரைப்படத்தின் வசூலை லியோ திரைப்படம் 6 நாட்களில் முறியடித்து அடுத்ததாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டையை முறியடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் அதிக வசூல்
இந்நிலையில், லியோ திரைப்படம் இங்கிலாந்தில் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது அஹிம்சா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுவரை லியோ திரைப்படம் வசூல் செய்யவே இல்லை. மிகப்பெரிய டிசாஸ்டர் படம் என கம்பு சுத்திக் கொண்டிருந்த ரமேஷ் பாலா கொஞ்சம் கொஞ்சமாக லியோ படத்தின் வசூல் குறித்த உறுதியான தகவல் வெளியாகி வரும் நிலையில், லியோ படத்தை பாராட்டி தற்போது ட்வீட்களை போட தொடங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான், சாண்டி, மடோனா சபாஸ்டியன், வையாபுரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருவது கண்கூடாக தெரிகிறது.
மேலும், தமிழ்நாட்டை போலவே கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் லியோ படத்தை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்சமாக 50 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் தற்போது 45 கோடி வரை லியோ வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.