சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி ரஜினியை அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றியால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
தற்பொழுது ரஜினி ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ரஜினி சில நிமிடங்கள் கெஸ்ட் ரோலில் கேமியோவாக நடித்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக ரஜினி தனது 170 வது படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் களமிறங்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பாகுபலி வில்லன் ராணா, மஞ்சு வாரியார் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து மிக பிரம்மாண்ட கூட்டணியாக ரஜினியின் 171வது திரைப்படம் உருவாகியுள்ளது.
அதாவது ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது 171 வது படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி உலக அளவில் தெறிக்கவிடும் வெற்றியை பெற்று வருகிறது. லியோ திரைப்படத்திற்கு பல பாசிட்டிவ் கமெண்டுகள் இருந்தாலும் சில நெகட்டிவ் கமெண்ட்களும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன் கதாபாத்திரம் சில இடங்களில் திறமையாக கையாளப்படவில்லை என பல கருத்துக்கள் வெளிவருகின்றன.
நடிப்பே வேண்டாம் என தலை தெரிக்க ஓடிய சிவாஜி… அப்படி என்ன நடந்திருக்கும்?
இதை மனதில் கொண்ட லோகேஷ் தனது அடுத்த படமான தலைவர் 171 வது படத்தில் ஒரு மாஸ் வில்லனை களம் இறக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் ரஜினி – லோகேஷ் இணையும் திரைப்படத்திற்கு மலையாள நடிகர் பிருத்விராஜ் அவர்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரித்விராஜ் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்தடுத்து மலையாள ஹீரோக்களை வில்லனாக தமிழ் படங்களில் களம் இறக்கி வித்தியாசமான முறையில் ரசிகர்களை கொண்டாட வைக்கும் லோகேஷின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.