நவராத்திரி 2ம் நாளான இன்று (16.10.2023) பூஜை செய்வது எப்படி? கொலு வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
நவராத்திரி 2ம் நாளில் துர்க்கையை வழிபடும் நாள். இன்று அம்பிகையின் ரூபம் ராஜராஜேஸ்வரி. இந்த அம்பிகையைப் பார்த்தாலே பார்த்துக் கொண்டே இருக்கலாம். போர் என்று வந்துவிட்டால் அம்பிகை இந்த அம்சத்தில் தான் எழுந்தருள்வாள்.
இந்த அம்பிகையை வழிபடுபவர்களுக்கு எந்தவிதமான மந்திர சித்தியை நினைத்து வழிபடுகிறார்களோ அதைப் பெறுவார்கள். இன்னொன்று அவர்களை இன்னொருவரால் மந்திரத்தில் வசியம் செய்ய முடியாது.
இந்த அம்பிகையை வழிபடுபவர்களை மந்திரம், எந்திரம், பில்லி, ஏவல், சூனியம் கொண்டு அடக்கி விட முடியாது. அதுமட்டுமல்லாமல் அஷ்டலட்சுமியும் வாசலில் வலிய வந்து அருள்புரிவார்களாம். இன்னொரு சிறப்பு தோல்வியே அவர்களுக்கு வராது. வெற்றியையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கலாம். அரசபோக வாழ்க்கை கிடைக்கும். அரசனும் அவர்களது பேச்சுக்குத் தலையாட்டுவார்கள்.
வாழ்க்கை ரொம்ப போராட்டமா இருக்குன்னு சொல்றவங்கள் இந்த அம்பிகையை 48 நாள்கள் வழிபட்டால் போதும். அவர்களது வாழ்க்கை பூந்தோட்டமாக மலர்ந்து விடும். இன்று அம்பிகைக்கு லலிதாம்பிகை என்றும் பெயர் உண்டு.
இன்று முல்லை மலர் வைத்து அம்பிகையை வழிபடலாம். மருவு இலையை வைத்து அர்ச்சிக்கலாம். புளிசாதம் நெய்வேத்தியம் செய்யலாம். மாம்பழம் படையல் வைக்கலாம். கடலை ரகத்தில் சுண்டல் செய்வது விசேஷம். கல்யாணி ராகத்தில் பாட்டுப் பாடலாம்.
கொலு வைத்தவர்கள் காலை, மாலை பூஜை செய்யலாம். காலையில் பழங்கள் உலர்ந்த திராட்சை வகைகள் வைத்து நெய்வேத்தியம் பண்ணலாம். மாலையில் பொங்கல், புளியோதரை, சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். காலையில் 8 முதல் 9 மணிக்குள் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். இன்று வழிபடுவதால் நோய் நீங்கும்.