நான் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை.. வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை கிழித்து தொங்க விட்ட விஷ்ணு!..

By Sarath

Published:

பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் மரியாதை குறைவாக பேசி வரும் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை நடிகர் விஷ்ணு விளாசி எடுத்துள்ளார். ஜாக்கி போடுவது முக்கியமல்ல, முதலில் ஒருவருக்கு மரியாதை கொடுத்து பேசுவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என சவுக்கடி கொடுப்பது போல பேசியுள்ளார்.

மேலும், நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா, வாடா போடான்னு ஏன் பேசுற? நான் உன்னை வாடி போடின்னு பேசவா? என சரமாரியாக கேள்விகளை கேட்டு நொங்கு எடுத்து விட்டார்.

வாங்கி கட்டும் வனிதா மகள்:

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா பங்கேற்றுள்ளார். முதல் வாரத்தில் சீனியர் நடிகை விசித்ரா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோவிகா அவரை ஒருமையில் பேசியதை பலரும் கண்டித்து இருந்தனர்.

ஆனால், தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள பிரதீப் ஆண்டனி, விஷ்ணு உள்ளிட்ட அனைவரையும் மரியாதை கொடுக்காமல் வயது வித்தியாசம் பார்க்காமல் வாடா போடா என பேசி பலரது எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார் ஜோவிகா விஜயகுமார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது வாரம் இன்று களைக்கட்டும் எனப் பார்த்தால், பவா செல்லதுரை வாக் அவுட் ஆன நிலையில் எவிக்ஷன் கிடையாது என முன்னதாகவே அறிவித்து ரசிகர்களை அப்செட் ஆக்கி விட்டனர்.

மரியாதை தெரியாதா?:

ஆனால் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அது தெரியாது என்பதால், கடைசிவரை பிரதீப் ஆண்டனி, மாயா மற்றும் மாயாவுடன் கிசுகிசு பேசி வரும் பூர்ணிமா உள்ளிட்ட மூவரை வைத்து கமல் செய்த விளையாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த வாரம் மாயா தான் ஓட்டுகளின் அடிப்படையில் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் பவா செல்லதுரை அவமானம் தாங்காமல் வீட்டை விட்டு அவரே வெளியேறிய நிலையில், மாயா இந்த வாரம் தப்பித்துக் கொண்டார்.

மாயா எஸ்கேப்:

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் மாயா நடித்ததால் தான், அவருக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கப்பட்டது என்கிற சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன.

அடுத்த வாரம், ஜோவிகா மற்றும் மாயா மீண்டும் நாமினேஷனில் இடம் பெறுவார்கள் என்றும் இருவரையும் டபுள் எவிக்ஷன் செய்து வெளியே அனுப்புங்கள் கமல் சார் என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விளாசிய விஷ்ணு:

அடிப்படை அறிவு என்பது இடம் பொருள் ஏவல் பார்த்து பேச வேண்டும் என்றும், வயதில் மூத்தவர்களுக்கு குறைந்தபட்சம் மரியாதையை கொடுக்க வேண்டும். ஆனால் அது எதுவும் உனக்கு தெரியவில்லை. நான் உன்னை வாடி போடின்னு பேசட்டா, அதைக் கேட்டுட்டு நீ சும்மா இருப்பியா, அதேபோலத்தான் நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் இல்ல, ஏ வா போன்னு பேசுறது, வாடா போடா போட்டு பேசுறது இந்த வேலை எல்லாம் வச்சுக்காத ஜோவிகா என நெத்திப் பொட்டில் அடித்தது போல விஷ்ணு வெறித்தனமாக விளாசி உள்ளார்.