ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!

By Staff

Published:

வாரத்தில் ஏழு நாட்கள் , அந்த ஏழு நாட்களுக்கும் ஏழு கிரஹங்கள் ஆட்சி புரிகின்றன. ஒவ்வொரு கிழமையில் அந்த கோள்கள் ஆளப்படுவதாக ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. அந்த கோள்களுக்கு பிரத்யேக  நிறங்கள் இருக்கின்றது. அந்த கோள்களுக்கான பிரத்யேக ஆடைகள் அணிவதன் மூலம் நல்லவை நடைபெறும் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது நிறம் அதிர்ஷ்டம் தரும் என்பது அவர்களது நம்பிக்கை.

beb91dba48f945d7520539ba04accaf5

என்ன கிழமையில் என்ன வண்ணங்களில் ஆடை அணியலாம் என்பதை பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரியது. சூரியனின் அருள் பெற மஞ்சள் நிறம், ஆரஞ்சு போன்ற நிறங்களில் ஆடை அணியலாம். சூரியனின் அருள் பெற சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆடை அணிந்து கொள்ளலாம்.

திங்கள்கிழமை சந்திரன் ஆட்சி புரியும் நாளாக கருதப்படுகிறது. அன்று வெண்மை நிறத்தில், ஊதா நிறத்தில் ஆடை அணிந்தால் சந்திரனின் ஆசி கிடைக்கும். அன்று சிவபெருமானுக்கு விசேஷமான நாளாக கருதப்படுகிறது.

பெயருக்கு ஏற்றார் போல செவ்வாய் கிழமையில் செவ்வாய் கிரகம் ஆட்சி புரிகின்றது. அதனால் சிவப்பு, ஆரஞ்சு போன்ற  நிறத்தில் ஆடை அணியலாம். முருகனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. மேலும் அம்மன் கோவில்களில் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து விரதம், பூஜைகள் செய்யலாம்.

பொன்  கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க நாளாக புதன்கிழமை கருதப்படுகிறது. புதன் கிழமையில் புதன் ஆட்சி புரிகின்றார். அன்று பெருமாள் வழிபாடு செய்தால் நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். அந்த புதன் பகவனக்கு உரிய கிழமையில் பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் அவரின் அனுக்ரஹம்  கிடைக்கும்.

வியாழக்கிழமை குரு  பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுவதால் மஞ்சள் ஆடை அணியலாம். இந்த வியாழக்கிழமையில் மஞ்சள் ஆடை அணிந்து செய்யும் காரியங்கள் யாவும் நல்லவிதமாக நடைபெறும். அன்று லட்சுமி தேவியை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்களை தடங்கல் இன்றி நடத்துவதற்கு குரு பகவான், லட்சுமி அருள் புரிவார்கள்.

வெள்ளிக்கிழமை சுக்ரன் ஆளப்படுவதால் வெண்மை, கடல் நீல நிறத்திலும் உடுத்தலாம். அன்று சுக்ரன், லட்சுமியை வழிபட்டால் நல்ல அறிவாற்றல், வேண்டியதை அருள் புரிவார்கள்.

இந்த சனிக்கிழமை பெயருக்கு ஏற்றார் போல சனி பகவான் ஆட்சி புரிகின்றார். அவருக்கு இஷ்ட நிறமான கருப்பு, கருநீலம் போன்றவற்றை உடுத்தலாம். கோவிலுக்கு செல்லும் பொழுது கருப்பு போன்ற நிறத்தை  பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது இந்த நிறத்தில் ஆடை அணிவதை தவிர்த்து விட வேண்டும்.

Leave a Comment