இந்த பாரத நாட்டில் எண்ணற்ற சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் பற்பல அடையாளங்கள் அதிசயங்கள் உள்ளது. அந்த அடிப்படையில் இந்த கோவிலும் ஒரு அதிசயமான கோவில்தான்.
பட்டுக்கோட்டையில் இருந்து சில கிமீ தூரத்தில் பரக்கலக்கோட்டை உள்ளது. இந்த ஊரில் உள்ளது பொது ஆவுடையார் கோவில்.
வான்கோபர் மகாகோபர் என்ற இரு முனிவர்களுக்கு இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற சந்தேகம் ஏற்பட்டது அதற்காக இருவரும் விவாதம் செய்தனர். இதை கேள்விப்பட்ட சிவபெருமான் இந்த இடத்திற்கு வர சொல்லி அவர்களுக்கு விளக்கம் கூறினார்.
இல்லறமாயினும் துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்புதான் என சிவபெருமான் கூறினாராம். ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று நடுநிசி வேளையில் அவர் இவ்விசயத்தை கூறியதால் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு 12மணிக்கு இக்கோவில் திறக்கப்படுகிறது.
கார்த்திகை மாத சோமவாரம் இன்னும் விசேசமாக இருக்கும். இக்கோவில் சரியாக இரவு ஒரு மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும்.
அதுவும் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். ஜாதக ரீதியாக உள்ள அனைத்து தோஷங்களுக்கும், திருமணத்தடை, புத்திரத்தடை என பல விசயங்களுக்கும் அவர்களால் முடிந்த வாரங்கள் இக்கோவில் வந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து இரவு 12 மணி வரை காத்திருந்து வழிபட்டு செல்கின்றனர்.
பலருக்கும் தாங்கள் வேண்டி வரும் காரியம் அனுகூலம் ஆகிறது என்பது நம்பிக்கை.