ரஜினி அதை சொல்லி ரொம்ப மன வேதனை அடைந்தார்.. தாணு சொன்ன ரகசியம்..!

By Staff

Published:

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் என்பதை தாண்டி இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்பவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவை பொருத்தவரையில் கதாநாயகன் என்றால் சிவந்த நிறம், நல்ல உயரம், கனீர் குரல் வளம் போன்ற அம்சங்களுடன் இருந்தால் மட்டுமே அவர் ஹீரோ என்ற சூழலை மாற்றி அமைத்து அவரின் பஞ்ச் வசனமான என் வழி தனி வழி என்பது போல தனக்கான தனி ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் ரஜினிகாந்த்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என இரு துருவங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் போது தனக்கென தனி ஒரு ஸ்டைல் கொண்டு தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தார். வேகமாக நடப்பது, ஸ்டைல், வேகமாக வசனம் உச்சரிப்பது போன்றவை மற்ற ஹீரோக்களில் இருந்து இவரை தனித்தே அடையாளப்படுத்தியது. தொடர்ந்து தன்னுடைய தனி திறமையின் மூலம் படிப்படியாக எண்பதுகளின் உச்சபட்ச நடிகராக உயர்ந்தார்.

பின்னாளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். இன்று இவரின் பட்டத்துக்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலே அதிகப்படியான வசூல் சாதனை புரிந்து எப்போதுமே நான் தான் நம்பர் ஒன் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார். 70 வயது தாண்டியும் தமிழ் சினிமாவில் கோலோச்சி, வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியாளராக திகழ்கிறார்.

சினிமாவில் ஒவ்வொரு ஹீரோக்கும் ஏதாவது ஒரு படம் திருப்பு முனையாக அமையும் சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய திரைப்படங்கள் ரஜினியை உலகளவில் அறியச் செய்தாலும் அதற்கு பின் வெளிவந்த கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய திரைப்படங்கள் அவரின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு இருந்தது. உடனே தன்னுடைய பாதையை மாற்றி வயதிற்கு ஏற்றார் போல நடித்த படம் தான் கபாலி இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். மற்றும் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருப்பார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து கொண்டிருக்கும் பொழுது நிகழ்ந்த சம்பவத்தை தாணு கூறி இருக்கிறார். அதில், “படப்பிடிப்பு தளத்தில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் நீண்ட நேரம் ஆனாலும் வெளியில் காத்திருப்பர். மழை வந்தாலும் களையாமல் அங்கேயே நிற்பார்கள். இதைப் பார்த்த ரஜினி இவர்களுக்கு நாம என்ன செஞ்சுட்டோம், இனிமே நம்ம என்ன செய்யப் போறோம் தெரியல எதுக்காக இப்படி நிக்கிறாங்க இவங்க இப்படி நிக்கிறத பார்த்தா எனக்கு ரொம்ப மன வேதனையாக இருக்கு” என்று தன்னிடம் சொன்னதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ரஜினி எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அவரின் எளிமையும் மனிதத்துவமும்தான் மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்கிறது.

Tags: rajinikanth