லியோ படத்திற்காக ப்ரொமோஷனில் இறங்கிய அனிருத்! சரவெடிகளை தெறிக்க விடும் பதிவு!

By Velmurugan

Published:

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் இந்த மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. சமூக வலைதளங்களில் லியோ திரைப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வைரலாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து தனது முதல் ப்ரொமோசனை தொடங்கி இருந்தார்.

அதைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளரான அனிருத் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக அனிருத் இசையமைத்த ஜவான், ஜெயிலர் போன்ற திரைப்படத்திற்கும் இதுபோன்று அவர் ட்விட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

லியோ திரைப்படத்தை பார்த்து இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐந்து ஃபயர் இமோஜியும், ஐந்து கிரேக்கர் இமோஜியும், 5 கப் இமோஜியும் கொடுத்துள்ளார். அனிருத் பதிவை பார்த்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக தான் இருக்கும் என கொண்டாடி வருகின்றன.

அதற்கு காரணம் அனிருத் ஜெயிலர் படத்தில் பார்த்துவிட்டு மூன்று ஃபயர் இமோஜியும், 3 கப் இமோஜியும் கொடுத்திருந்தார். அதற்கே ஜெயிலர் திரைப்படம் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை விட விஜய்யின் லியோ படத்திற்கு அதிகமான இமோஜிகள் அனிருத் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிகப்படியான பார்வையாளர்களை கடந்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது சிங்கிள் கதாபாத்திரமா என ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ரசிகர்களை மிரளவைத்த சைக்கோ கில்லர் திரைப்படங்கள் ஒரு பார்வை!

மேலும் லியோ படத்தின் பிசினஸ் தற்போது வரை 487 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என பல பேட்டிகளில் தெரிவித்த நிலையில் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே 187 கோடி வரைக்கும் லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு பெற்று தந்துள்ளதாக திரை வட்டாரத்தில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் ரசிகர்களை ஏமாற்றியது ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனர் லோகேஷ் அவர்களே முன்வந்து லியோவிற்கான ப்ரொமோஷனில் இறங்கியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரிக்க செய்கிறது.