தமிழில் ஒரே ஒரு படம், அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்த நடிகை அனு அகர்வால், கார் விபத்தில் ஒன்று சிக்கி படுகாயம் அடைந்து, கிட்டத்தட்ட ஒரு மாதம் கோமாவில் இருந்த நிலையில், அவர் சினிமாவில் இருந்தே கிட்டத்தட்ட விலகிவிட்டார். அவர் தான் நடிகை அனுகர்வால்.
நடிகை அனு அகர்வால் கடந்த 1988ஆம் ஆண்டு ‘இஷி பனாஹே’ என்ற இந்தி தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது ‘ஆஷிக்’ என்ற இந்தி படத்தில் தான். இந்த படத்தில் அவர் அறிமுகமான நிலையில் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக இவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது திரைப்படமான குஷாப் தமாஷா என்ற படமும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தான் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘திருடா திருடா’ என்ற திரைப்படத்தில் சந்திரலேகா என்ற கேரக்டரில் நடிகை அனுகர்வால் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
இதனை அடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அனு அகர்வால் 1999ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய எலும்புகள் நொறுங்கி, மண்டை உடைந்து, மூளை பாதிப்புக்கு உள்ளாகி, உடல் முழுவதும் செயல்படாமல் போனது. 29 நாட்கள் கோமாவில் இருந்த அவர் அதன் பிறகு மீண்டும் கண் முழித்தாலும் பல மாதங்களாக அவருக்கு நினைவு திரும்பவில்லை.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர் நினைவு திரும்பி, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கினார். நான் எந்த நாட்டில் வாழ்கிறேன், எங்கு வாழ்கிறேன் என்பது கூட தெரியாமல் இருந்தது என்றும், அந்த அனுபவம் எனக்கு மிகவும் கொடுமையாக இருந்தது என்றும், என் குடும்பம் எங்கே இருந்தார்கள் என்பது கூட எனக்கு மறந்து போய்விட்டது என்றும், அவர் தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
சில வருடங்கள் கழித்துதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகள் திரும்பியதை அடுத்து நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதினேன் என்றும், என்னுடைய அந்தரங்க விஷயத்தை அதில் கொட்டி இருப்பதால் இந்த புத்தகத்தை எல்லோரும் படிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார். எனக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டு என்பதால் அந்த டைரியிலிருந்து என்னுடைய முந்தைய சம்பவங்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார். என்னுடைய உடல்நலம் மீண்டும் திரும்பி வந்ததற்கு என்னுடைய குடும்பத்தார் மற்றும் அம்மா தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ‘கண்டிப்பாக நடிப்பேன், எனக்குரிய கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன்’ என்று கூறினார். அவர் திரையில் நடித்து கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
