தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வர்ம் கோவில். இந்த கோவில்
ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்து, இங்கு ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான்.
ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இராகு, தட்சகன், கார்கோடகன், வாசுகி ஆகிய நாகங்கள் இங்கிருக்கும் நாகநாதரை வணங்கியுள்ளன.
இங்கு ராகுபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த ராகு பகவானுக்கு ஒவ்வொரு ராகு காலத்திலும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள ராகு தோஷம் நீங்குவதாக ஐதீகம். இங்கு நாகநாதரையும் அம்பிகையையும் வணங்கி இந்த ராகு பரிகார பூஜை செய்து கொள்வதால் ஜாதகத்தில் உள்ள திருமணத்தடை, குழந்தையின்மை பிரச்சினைகள் முடிவுக்கு வருவதாக நம்பப்படுகிறது.
பெரும்பாலான ஜோதிடர்கள் ஆந்திராவின் காளஹஸ்தியையும் இந்த கோவிலையும் மட்டுமே அதிகம் பரிந்துரைப்பதால் ராகு கால நேரத்தில் குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாளில் வரும் ராகு கால நேரங்களில் அதிக கூட்டம் வருகிறது.
இந்த கோவிலுக்கு ராகு கால வேளையில் வருகை தந்து கோவிலில் ராகுகால பூஜைக்குரிய அர்ச்சனை டிக்கெட் விற்பார்கள் அதை வாங்கி யாருக்கு பரிகார பூஜை செய்ய வேண்டுமோ அவர்கள் கலந்து கொள்ளலாம்.