புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்ச அமாவாசையில் இறந்து போன நம் முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்து நம்மை ஆசிர்வதிப்பர் என்பது ஐதீகம்.
பெளர்ணமி முடிந்த அடுத்த நாளே மஹாளய பட்சம் துவங்கி விடுகிறது. தொடர்ந்து மஹாளயபட்ச அமாவாசை வரும் வரை தினமும் திதி தர்ப்பணம் கொடுக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அமாவசை அன்று நீர்நிலைகளில் குளித்து விட்டு திதி தர்ப்பணம் செய்கிறார்கள்.
காசி, கயா, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், சேதுக்கரை, பவானி சங்கமேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி,கொடுமுடி காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், மதுரை வைகை கரை திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், சதுரகிரி சுந்தரமகாலிங்க கோவில்,ஏரல் தாமிரபரணி ஆறு இதுபோல இடங்களில் கூட்டம் அலைமோதும்.
இது போல இடங்கள் திதி தர்ப்பணம் கொடுக்க மிக முக்கியமான இடங்களாக கருதப்படுகின்றன.