இந்துக்களின் வழிபாட்டில் பாம்பிற்கும் இடமுண்டு. முருகனின் காலில் பாம்பிருக்கும். பராசக்திக்கும் பாம்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. விஷ்ணு பகவான் சயனித்திருப்பது ஆதிசேஷன் என்ற பாம்பின்மீது… இப்படி பாம்பிற்கும் நமது வழிபாட்டிற்கும் தொடர்புண்டு,
சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இப்படி பாம்பினை அணிகலனாய் அணிந்திருக்க காரணம் உண்டு. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும்போது, நாகம் கக்கும் விசத்தினைப்போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின்மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.