கடந்த ஏழரை வருடங்களாக விருச்சிக ராசிக்குள் இருந்த சனீஸ்வரர் அந்த ராசிக்காரர்களுக்கு சொல்ல முடியாத துயரங்களை செய்து விட்டார் என சொல்லலாம்.
எல்லா ராசிக்குள்ளும் சனி பகவான் பிரவேசிக்கிறார் ஆனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டும் இதில் கொஞ்சம் அடி பலம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
யூ டியூபிலும் மற்ற இணையங்களிலும் வெளியாகி இருக்கும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களில் விருச்சிகராசியைத்தான் அதிகம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதை நீங்கள் நேரில் சோதனை செய்து பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். பல நடுத்தர வயதுடைய நபர்கள் அதாவது 35 வயதில் இருந்து 40 வயதில் இருப்பவர்களை இந்த ஏழரை சனி கூறு போட்டு விட்டது என கூறலாம்.
எல்லா விசயத்திலும் முட்டுக்கட்டை மேல் முட்டுக்கட்டை போட்டு படுத்தே விட்டானய்யா என சனீஸ்வரனை நோக்கி சரணாகதியே அடைந்தாலும் இவர்கள் வடித்த துன்பங்களை வார்த்தைகளில் வடிக்க இயலாது.
விருச்சிகராசிக்காரகள் கஷ்டப்பட்டு மலையளவு செய்த பல செயல்களுக்கு சிறு கடுகு அளவுக்கு கூட அங்கீகாரம் கிடைத்திருக்காது.
அப்படி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் விருச்சிகராசிக்காரர்களின் நிலைமையை.
விருச்சிகராசிக்கார்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டவர்கள் இவர்களுக்கு மிக பகையான கிரகம் சனி இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் கடுமையான பிரச்சினைகள் தான் ஏற்படும். இவர்கள் எந்த அளவு துன்பபட்டிருப்பார்கள் என்பதை விருச்சிகராசிக்காரரான பிரதமர் மோடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
சாதாரண மக்களுக்கே இப்படி என்றால் நாட்டை ஆளும் மஹாராஜாவுக்கு ஏழரை சனி பிடித்தால் எப்படி இருக்கும் . அப்படித்தான் பிரதமர் மோடிக்கும் கடந்த ஏழரை வருடங்களாக பிடித்திருந்த ஏழரை சனி கிளைமாக்ஸை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த 2014 தொடங்கிய ஆட்சியின்போதே பிரதமர் மோடி ஏழரை சனியின் தாக்கத்தில் தான் இருந்தார்.
மஹாராஜாவுக்கு ஏழரை சனி என்றால் குடிமக்களுக்கும் அதேதான். காரணம் இவர் செய்த பல செயல்கள் எதிர்வினையாக்கப்பட்டு பலரால் தூண்டி விடப்பட்டு பெரிதுபடுத்தப்பட்டு பல பிரச்சினைகள் வெடிக்க காரணமானது. இதனால் மக்கள் நிம்மதியற்ற மனநிலைக்கு சென்றனர்.
பொருளாதார ரீதியாக மந்தமாக சென்று கொண்டிருக்கிறது என பலர் சொன்னாலும் இவருக்கு தற்போது இருக்கும் அமைப்பின்படி 2020ல் பொருளாதார ரீதியாக மிகப்பெரும் ஏற்றங்களை சந்திக்க இருக்கிறது இந்தியா.
இதனால் இவர் செய்த நற்செயல்கள், நற்சிந்தனைகள் போன்றவை நல்ல பலன்களை வாரி வழங்குவதற்கு பதில் இவருக்கு எதிராகவே அமைந்திருக்கும். இதுவரை எந்த பிரதமர் பெயரையும் ஊடகங்களும் மோடிக்கு எதிராக கை கோர்த்திருப்பவர்களும் இவ்வளவு முறை மோடி மோடி என சொல்லி இருக்க மாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை மோடி மீது வன்மத்தை கக்கிய பலர் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு எதிராக செயல்பட்ட அரசியல்வாதிகள் பலர் தனது அந்திமக்காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடம் 2020 வந்ததும் முழுவதும் ஏழரை சனி பாதிப்பில் இருந்து முழுமையாக மோடியின் ராசியான விருச்சிக ராசி விலகுகிறது.
அதன் பின் மோடி செய்யும் பல நற்செயல்கள், திட்டங்கள் அதிக விமர்சனமின்றி சர்ச்சையின்றி எளிதாக நடக்கும். தற்போது மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை செய்வதே இதற்கு ஒரு முன்னுதாரணமாய் திகழ்கிறது. அதிகம் பேரால் பாராட்டப்படுகிறது. விருச்சிகராசியில் பாதச்சனியாக வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான் அந்த ராசியை விட்டு விலகி கொண்டே இருப்பதற்கு இது ஒரு டிரெய்லர் போலத்தான் இது போல விசயங்கள் நடை பெறுகின்றன.
சமீபத்திய அமெரிக்க அதிபர் டிரம்பின் சந்திப்பு, சீன அதிபரின் சந்திப்பு இது போல வல்லரசு நாட்டின் அதிபரின் சந்திப்பு இவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றன.
இதுவரை அமெரிக்க அதிபர்களை மட்டும்தான் உலக நாட்டின் மக்கள் அனைவருக்கும் தெரிந்து வந்தது. இப்போது பிரதமர் மோடியை உலக நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்து கொண்டு வருகிறது.
தீபாவளிக்கு பிறகு வரும் இரண்டாம் இட குருப்பெயர்ச்சியும் மிக சாதகமான நிலையிலேயே விருச்சிகராசிக்காரகளுக்கு உள்ளது.
2020ல் ஜனவரியிலேயே சனிப்பெயர்ச்சி வருகிறது.தனுசு ராசியில் ஜென்மச்சனியாய், விருச்சிகராசியில் பாதச்சனியாய் வீற்றிருக்கும் சனீஸ்வரர் அடுத்த ராசியான மகரத்துக்கு செல்கிறார்.
மெயின் பிக்சர் அடுத்த வருடம் தான் . அடுத்த வருடத்திற்கு பிறகு அவருக்கு முற்றிலும் ஏறுமுகமாய் இருக்க போகிறது அதன் பிறகு மோடியை பல வருடத்துக்கு அசைக்க முடியாத தலைவராய் ஜொலிக்க போகிறார். பலருக்கு இது போல சொல்வது பிடிக்காவிட்டாலும் ஜோதிடப்படி இதுவே நிதர்சனமான உண்மை.