திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் இன்று குருப்பெயர்ச்சி

அந்த காலத்தில் ஜாதகம் கணிப்பதற்காக பழங்கால அறிஞர்கள் கூற்றின் அடிப்படையில் வாக்கிய பஞ்சாங்கம் கடைபிடிக்கப்பட்டது. பின்னாளில் அதில் உள்ள சின்ன சின்ன தவறுகளை திருத்தி , திருத்தி எழுதப்பட்ட கணிதமாக திருக்கணித பஞ்சாங்கம் தொடர்கிறது.…

அந்த காலத்தில் ஜாதகம் கணிப்பதற்காக பழங்கால அறிஞர்கள் கூற்றின் அடிப்படையில் வாக்கிய பஞ்சாங்கம் கடைபிடிக்கப்பட்டது. பின்னாளில் அதில் உள்ள சின்ன சின்ன தவறுகளை திருத்தி , திருத்தி எழுதப்பட்ட கணிதமாக திருக்கணித பஞ்சாங்கம் தொடர்கிறது.

c36f08ae024263872b3c13c349c92428

நூற்றில் ஐம்பது சதவீதம் பேர் திருக்கணித பஞ்சாங்கத்தையும், மீதம் ஐம்பது சதவீதம் பேர் பழமையான வாக்கிய பஞ்சாங்கத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

இந்த இரண்டு பஞ்சாங்கங்களின் அடிப்படையில் குருப்பெயர்ச்சியோ, சனிப்பெயர்ச்சியோ நிகழும்போது வித்தியாசம் வருகிறது.

அதன்படி குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த 28ம் தேதி நடைபெற்றது, திருக்கணிதப்படி இன்று 4ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கப்படியே குருப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது.

இதில் எதை பின்பற்றுவது நல்லது என ஜோதிட அறிஞர்கள் பல தளங்களில் பல காலமாக இரண்டு பக்கமாக விவாதங்கள் நடத்தி வருகிறார்கள். கட்டுரை எழுதி வருகிறார்கள் பார்க்கும் நமக்கு இரண்டு பக்கமும் நியாயம் இருப்பதாகவே தோன்றும் அதனால் நம் மனது என்ன சொல்கிறதோ அந்த பஞ்சாங்கத்தை நாம் ஃபாலோ செய்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன