உங்கள் ஜாதகத்தில் கடும் தடைகள் தாமதங்கள் உள்ளதா என்று ஜோதிடர்களிடம் காண்பித்தால் அவர்கள் அதை ஆராய்ந்து அப்படி பித்ரு தோஷம் இருக்கிறதென்றால் பரிந்துரைக்கும் கோவில் இராமேஸ்வரம், காசி போன்ற முன்னோர் வழிபாட்டு தலங்களாகும்.
மேலும் சேதுக்கரை, தேவிபட்டினம், கொடுமுடி காவிரி,பவானி சங்கமேஸ்வர் இப்படி முன்னோர் கடன் நீக்கும் கோவில்கள் தமிழ்நாட்டில் அதிகம் உண்டு.
இது போல முன்னோர்களின் தோஷம் இருக்கிறது என நீங்கள் கருதினால் நீங்கள் செல்ல வேண்டிய கோவில்தான் திருவெண்காடு கோவில்.
இங்குள்ள மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் இது நவக்கிரக கோவில்களில் புதன் ஸ்தலமாக போற்றப்படுகிறது.
அசுரன் ஒருவன் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு துன்பம் செய்தான் அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான் . அதன் அடிப்படையில் கோவில் உருவானது.
இது முன்னோர்களுக்கு மோட்சம் கொடுக்கும் ஸ்தலமாக போற்றப்படுகிறது. இங்கு பித்ரு பரிஹார பூஜைகள் ஹோமங்கள் இங்குள்ள பழமையான வடவால மரத்தின் அருகில் செய்யப்படும் காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது இதன் அருகில் முன்னோர்களுக்கான பூஜைகள், பரிகாரங்கள் செய்து வழிபடுவது மரபு.
காசிக்கு நிகரான ஸ்தலம் இது என்பதால் இங்கும் பித்ரு பரிஹாரங்கள் அதிகம் செய்யப்படுகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது.